வெள்ளி, 2 ஜூலை, 2010

கலாநிதி குமரகுருபரன் அனைத்து அமைப்புகளும் குறைந்தப்பட்ச வேலைத்திட்டதின் அடிப்படையில் ஒருமுத்த குரலிலே அரசாங்கத்துடனும்,

-ஜனநாயக மக்கள் முன்னணி
எமது முன்னணியின் தலைமைக்குழுவின் முடிவிற்கு அமைய இன்று கொழும்பில் நடைபெற்ற தமிழ் கட்சிகளின் ஒன்றிய கூட்டத்தில் எமது கட்சி கலந்துகொண்டுள்ளது. போருக்கு பிந்தியதான இன்றைய சவால்மிக்க காலகட்டத்தின் முக்கியத்துவம் கருதியும், தமிழினத்தின் ஒன்றுபட்ட செயற்பாட்டை அடையாளப்படுத்தும் முகமாகவும் எமது கட்சி இம்முடிவை எடுத்துள்ளது.

இன்றைய கூட்டத்தில் எமது கட்சியின் பொதுச்செயலாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன் பிரதிநிதித்துவப்படுத்தினார். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் உடன் பிறப்புக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான போராட்டங்களுக்கு எமது கட்சி தொடர்ச்சியாக ஆதரவை வழங்கிவந்துள்ளதுடன், மனித உரிமை போராட்டங்களில் முதன்மை பங்காளியாகவும் இருந்துவந்திருக்கின்றது.
இந்த எமது வரலாற்று ரீதியான செயற்பாட்டின் தொடர்ச்சியாகவே நாம் இதை காண்கின்றோம். வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அமைப்புகளும் குறைந்தப்பட்ச வேலைத்திட்டதின் அடிப்படையில் ஒருமுத்த குரலிலே அரசாங்கத்துடனும், சர்வதேச சமூகத்துடனும் உரையாடலை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதை எமது கட்சி வரவேற்கின்றது.
இதற்கு சமாந்தரமாக வடகிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற இந்தியவம்சாவளி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் கட்சிகளும் படிப்படியாக இந்த ஒன்றுப்பட்ட செயற்பாட்டிற்குள் உள்வாங்கப்படவேண்டும். பாரம்பரியமான அரசியல் முரண்பாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே இன்றைய காலகட்டத்தில் நாடு முழுக்க வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை: