புதன், 15 பிப்ரவரி, 2017

அதிமுகவின் அழிவில் காலூன்ற துடிக்கும் RSS காவிக்கூட்டம் ! உள்ளூர் மாபியாவின் இடத்தை பரம்பரை மாபியா ..

பா.ஜ.கவின் அதிமுக அழித்தொழிப்பை, ஒரு பழி வாங்கல் உணர்வோடு இன்று கொண்டாடினால் அது மிகவும் தற்காலிகமான கொண்டாட்டம்தான். தொலை நோக்குடன் இப்பிரச்சினையை அணுக வேண்டும். நினைவு கொள்ளுங்கள்.. உள்ளே நுழைந்திருப்பது ஒரு விஷப் பாம்பு. .. RSS... BJP ..காவி
நினைவிருக்கட்டும், பிரச்சினை அத்தனை எளிதானதல்ல..
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நான் மிக மதிக்கும் என் நீண்ட நாள் நண்பர் ஒருவருடன் ஒரு கருத்துப் பரிமாற்றம்..
இனி பா.ஜ.க வின் வியூகம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஒற்றுமையைக் குலைப்பதுதான் என நான் இட்ட பதிவிற்கு அந்த நண்பர் இப்படி ஒரு நியாயமான அய்யத்தை முன் வைத்தார்.
"எடப்பாடி தலைமையிலான அரசை பாஜக வால் தனக்குசாதகமாக கையாண்டுவிட முடியாதா? ஒரு தெளிவுக்காக கேட்கிறேன்"
மிகவும் நியாயமான கேள்வி. அதற்கு என் பதில்:
"Marx Anthonisamy சசிகலாவையே அவர்கள் சாதகமாகக் கையாண்டிருக்க்க முடியாதா என்ன? அவர்களின் நோக்கம் குழப்புவதே. அதன் மூலம் இங்கு காலூன்றுவதே. உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். சசிகலா கும்பலை வீழ்த்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்திற்கு முடிவு வரும் என நம்பி இங்கு சிலர் பா.ஜ.க முயற்சிக்குப் படு தீவிரமாக ஆதரவளிக்கின்றனர். அதைவிட அபத்தமான நம்பிக்கை ஏதுமில்லை. அந்த ஆதிக்க சக்திகள் மத்தியில்தான் அவர்களது RSS இன்று இன்னும் வலிமையாக வேர் பாய்ச்சி வருகிறது"
# # #
இதை நான் இங்கே மீள் பதிவு செய்வதற்கான காரணம் இது ஒரு மிக முக்கியமான பிரச்சினை. எனது அடித்தள நண்பர்கள் பலரும் சசிகலாவிற்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைக் கொண்டாடுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.; யாருக்குத்தான் அதில் மகிழ்ச்சி இல்லை. எனக்கு மட்டும் இல்லையா என்ன?
இதே மன்னார் குடியில் இவர்களது ஆதிக்கத்தை எல்லாம் எதிர்த்துப் போராடிய அனுபவம் எனக்கு உண்டு. அழகு திருநாவுக்கரசர் என்று ஒரு அமைச்சர் நினைவு இருக்கிறதா? என்னை மன்னார்குடியிலிருந்து 300 கி மீ தொலைவுக்கு இடம் மாற்றிப் பழி வாங்கிய வரலாறெல்லாம் எனக்கு உண்டு. எல்லாம் இந்தக் கும்பல்தான்.

ஆனால் இன்று ஏதோ இந்த சசிகலா குடும்பத்துக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டு விட்டதாலேயே அந்த ஆதிக்கச் சக்திகளுக்கு அல்லது ஆதிக்க சாதிகளுக்கே தண்டனை வழங்கப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டாடுவதைப் போலவும், அந்த அடிப்படையில் உள்ளே புகுந்து வரும் மதவாத ஆதிக்க விஷப் பாம்புகளுக்கு ஆதரவாக நிற்பதும் எத்தனை பெரிய அபத்தம்.. .
அதே பகுதியில், கிழக்குக் கடற்கரை ஓரமாக இன்று வேர்கொண்டு வளரும் ஆர்.எஸ்.எஸ் வன்முறை அரசியல் எல்லாம் யாரை அடித்தளமாக கொண்டு வேர் பற்றி இன்று விஷ விருட்சமாய் வளர்ந்து நிற்கின்றன?
இதை யோசித்துப் பார்க்க வேண்டும். அதனால்தான் இன்று பா.ஜ.க செய்யும் இந்த அழிப்பு வேலையைக் கண்டு முஸ்லிம் நெஞ்சங்கள் அனைத்தும் கட்சி வேறுபாடின்றிப் பதறி நிற்கின்றன.
பா.ஜ.கவின் அதிமுக அழித்தொழிப்பை,
ஒரு பழி வாங்கல் உணர்வோடு இன்று கொண்டாடினால் அது மிகவும் தற்காலிகமான கொண்டாட்டம்தான்.
தொலை நோக்குடன் இப்பிரச்சினையை அணுக வேண்டும்.
நினைவு கொள்ளுங்கள்..
உள்ளே நுழைந்திருப்பது ஒரு விஷப் பாம்பு..
Marx Anthonisamy முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: