செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

கூவதூரில் 2500 போலீசார் குவிப்பு .. எந்த நேரமும் எம் எல் ஏக்கள் மீட்கப்படலாம் .. கலவரமும் வரலாம் ,,

7வது நாளாக அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள்: கூவத்தூரில் 2500 போலீசார் குவிப்பு தனக்கு ஆதரவு அளிக்கக் கோரி அதிமுக எம்எல்ஏக்களை சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்டில் தங்க வைத்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா. நேற்று 3வது நாளாக அவர்களை சந்தித்து பேசிய சென்ற அவர், நேற்று இரவு அங்கேயே தங்கினார். இந்த நிலையில் இன்று கூவத்தூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5க்கும் மேற்பட்ட ஏடிஜிபிக்கள், 6 ஐஜி தலைமையில் சுமார் 2500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியூர் ஆட்கள் அனுமதிக்கப்படவில்லை. சென்னையில் இருந்து கூவத்தூரைத் தாண்டி மரக்காணம் வரை இந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வருவதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் சசிகலா தங்கியிருக்கும் இந்த ஓட்டலுக்கு வருவதாக செய்தி வெளியானதையடுத்து கூவத்தூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு ஊர்களில் இருந்து வரும் அதிமுகவினரை திருப்பி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. சசிகலா மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த கோல்டன் பே ரெசார்ட்டில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: