செவ்வாய், 12 அக்டோபர், 2010

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.25 கோடி: எடியூரப்பா

ஆட்சியை கவிழ்ப்பதற்காக அதிருப்தி எம்.எல்.ஏ. ஒவ்வொருவருக்கும் ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை பணம் அளிக்கப்பட்டுள்ளது என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.

கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பணபலம் மிக்க இடத்தில் இருந்துதான் அரசை கவிழ்க்க சதி நடந்துள்ளது. அதை நான் விரைவில் வெளிப்படுத்துவேன். ஆட்சியை கவிழ்ப்பதற்காக அதிருப்தி எம்.எல்.ஏ. ஒவ்வொருவருக்கும் ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை பணம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தப் பணமும் எப்படி வந்தது? ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் வழங்கப்பட்டது? என்பது குறித்து விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும். ஜனநாயகத்தை வேரோடு அழிப்பதற்கு காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் முயற்சி செய்கின்றன.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதற்காக சட்டசபையில் அவர்கள் நடந்து கொண்ட விதம், வெட்கக்கேடானது. என்னை அவமானப்படுத்துவதாக கருதிக்கொண்டு சட்டசபையையும், கர்நாடக மாநிலத்தையும் அவமதித்து விட்டனர் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: