செவ்வாய், 3 அக்டோபர், 2023

அமைச்சர் மெய்யானாதான் : நான் அமைச்சராக உயர காரணம் துர்கா ஸ்டாலின்தான்!

tamil.samayam.com :  எழிலரசன்.டி : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த மெய்யநாதன் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
 முன்னதாக ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவராக இருந்த மெய்யநாதன் 2016ஆம் நடந்த தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆலங்குடி தொகுதியில் வென்றார்.
பல சீனியர்களும் அமைச்சர் பதவியை எதிர்நோக்கி காத்திருந்த நேரத்தில் இரண்டாவது முறை எம்.எல்.ஏ.வான மெய்யநாதனுக்கு ஜாக்பாட் அடித்தது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசு கட்டுப்பாடு அமைச்சராக பொறுப்பேற்றார். அத்துடன், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறைகளையும் கவனித்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற நிலையில், அவருக்காக தன் வசம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைகளை விட்டுத் தந்தார்.
சீமான் யாருனே ராகுலுக்கு தெரியாது.. ஒரே போடாக போட்ட கே.எஸ்.அழகிரி..
இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முதலில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், பின்னர்தான் ஆலங்குடியில் போட்டியிடும் வாய்ப்பைத் தந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதற்கு முழு காரணமும் இந்த மண்ணில் பிறந்த அம்மா துர்கா ஸ்டாலின் தான்” என்று கூறினார்.

மேலும், “மீண்டும் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பினை பெற்றுத் தந்து, அரசியலில் அமைச்சராக உயர்வதற்கு காரணமாக இருந்த துர்கா ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒருவேளை அவர் எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தராமல் போயிருந்தால் என்னுடைய அரசியல் வாழ்க்கை திசைமாறிப்போயிருக்கும். ஆகவே அவர் பிறந்த இந்த மண்ணில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார். திருவெண்காடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் முதலமைச்சர் கள ஆய்வு - பெண்கள் கோரிக்கைக்கு உடனே கிடைத்த வெற்றி

தான் அமைச்சராக துர்கா ஸ்டாலின் தான் காரணம் என அமைச்சர் மெய்யநாதன் கூறியிருப்பதன் மூலம் அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் அவருடைய ஆதிக்கம் உள்ளது உண்மைதான் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளதாக அதிமுக, பாஜக தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர்.

தீவிரமாகும் காவிரி பிரச்னை.. எதிர்க்கட்சிகள் தரும் அழுத்தம்.. முடிவெடுப்பாரா மு.க.ஸ்டாலின்?

ஆனால், மெய்யநாதன் தரப்பினரோ துர்கா ஸ்டாலின் சொந்த ஊர் என்பதால் அவரை புகழ்ந்து பேசுவதற்காகவே அவ்வாறு பேசினார், மெய்யநாதன் உழைப்பினைக் கண்டுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை இளம் வயதிலேயே அமைச்சராக்கினார் என்று கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: