இலங்கநாதன் குகநாதன் : `Sanitary napkins` / ` `Sanitary products` என்ற சொல்லாடல்களைத் தவிர்ப்போம்; ஏனெனில் `Sanitary`எனும் போதே ஏதோ ஒன்றினைத் தூய்மைப்படுத்துவது என்ற பொருளில் வரும், அது `மாதவிடாய்` இனை அழுக்கு என்ற பொருளில் கொண்டு வரும். எனவே அதற்குப் பதிலாக ` Period products ` என்ற சொல்லினைப் பயன்படுத்துமாறு Oxfam நிறுவனமானது தனது ஊழியர்களைக் கேட்டிருந்தது. விழுமியங்களுக்கு முரணாக ஆங்கிலத்தலுள்ள இவ்வாறான தவிர்க்கப்பட வேண்டிய சொற்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் குறிப்பிட்டு, 92 பக்க அறிக்கை ஒன்றினை குறித்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. அவ்வாறான சில சொற்களைக் கீழே காணுங்கள்.
INCLUSIVE LANGUAGE GUIDE
AVOIDED INSTEAD
sanitary products period products /menstrual products
pregnant expectant mothers
black market Informal economy
mankind human beings / humankind
Migration crisis Migration as a complex phenomenon
refugee crisis Migration as a complex phenomenon
Developed country High income country
underdeveloped countries low income countries
Third vs first world High vs low income countries
Spokesman Spokesperson
Deaf People with hearing impairment
👆 இவ்வாறாகப் பட்டியல் நீளும். அவற்றில் பல ஏற்புடையவை, சில அந்த நிறுவனப் பணியாளர்களின் பணிக்கு மட்டும் பொருந்துபவை (eg :
Headquarters ) , மிகச் சில வாதத்துக்குரியவை (mother/father ).
அது நிற்க, பெண்களின் நலன் பேணும் `period products` பயன்பாட்டிலும் தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருப்பது பாராட்டத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக