hirunews.lk : பாகிஸ்தானில் தங்கியுள்ள 17 இலட்சம் ஆப்கானிஸ்தானியர்களை நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.
இதனால், அங்கிருந்து ஏராளமானோர் அகதிகளாக அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
இந்தநிலையில், பாகிஸ்தானில் அனுமதியில்லாமல் தங்கியுள்ள 17 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் அகதிகள், பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தானில் 17 இலட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு தலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக