ராதா மனோகர் : வள்ளலார் இராமலிங்க ஸ்வாமிகளின் பிறந்த நாள் அக்டோபர் 5, 1823
காணாமல் போன நாள் சனவரி 30, 1874
உண்மையில் வள்ளலாருக்கு என்னதான் நடந்திருக்கும்?
(கற்பூரத்தை கொட்டி அவ்வுடலை எரித்து விட்டார்கள் என்று தினவர்த்தமானி பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது)
வடலூர் இராமலிங்க வள்ளலார் பூட்டிய அறைக்குள் சென்று கதவை உள்ளிருந்து பூட்டி கொண்டார்.
பின்பு திறந்து பார்த்தபோது அவர் இருந்த அடையாளமே அங்கிருக்கவில்லை.
அவர் உடலோடு அப்படியே மறைந்து போய்விட்டார்
அதாவது சமாதி அடைந்து விட்டார் என்று வழக்கம் போல கதையளந்து கடந்துவிட்டனர் சனாதனிகள்!
யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபராக இருந்து பைபிளை தமிழில் மொழி பெயர்ப்பு செய்தவருமான திரு பெர்சிவல் பாதிரியார் இது பற்றி ஒரு முக்கிய குறிப்பை தனது தினவர்த்தமானி என்ற பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்
அப்பத்திரிகை தமிழிலும் தெலுங்கிலும் வெளியானது
தினவர்த்தமானி வார இதழ். 1855 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளியானது
ஆரம்பத்தில் திரு பீட்டர் பெர்சிவல் பாதிரியார் இதன் ஆசிரியராக இருந்தார்
பின்பு சி.வை. தாமோதரம் பிள்ளையும் அவரை தொடர்ந்து திரு கரோல் விசுவநாதபிள்ளையும் முறையே ஆசிரியர்களாக பணியாற்றினார் இவ்விதழ் திராவிடன் அச்சகத்தில்அச்சிடப்பட்டது.
அந்த பத்திரிகையில் வள்ளலாரின் பூட்டிய அறையில் சென்று பார்த்தபோது அவரது இறந்த உடல் மிக மோசமாக நாற்றமடித்தது . எனவே சென்று பார்த்தவர்கள் கற்பூரத்தை கொட்டி அவ்வுடலை எரித்து விட்டார்கள் என்று தினவர்த்தமானி பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது
இந்த செய்தியை ஒரு பொதுக்கூட்டத்திலேயே திரு வாலாசா வல்லவன் அவர்கள் கூறியிருந்தார்கள்
பெர்சிவல் பாதிரியாரின் தினவர்த்தமானி பத்திரிகையின் பிரதிகள் தற்போதும் நிச்சயமாக பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
இனியாவது இந்த உண்மையை ஆதாரத்தோடு வெளிக்கொணரவேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்!.
இது பற்றிய மேலதிகமான சில கருத்துக்களை எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்
அவை :
வள்ளலாரின் மர்ம மறைவும் நாவலரின் சந்தேக மௌனமும்!
வடலூர் ராமலிங்க சுவாமிகள் காணாமல் போய் அல்லது மர்மமாக இறந்து ஐந்து வருடங்களுக்கு பின்பாகத்தான் ஆறுமுக நாவலர் காலமானார்.
வடலூர் ராமலிங்க வள்ளலாரை கடுமையாக எதிர்த்து அவர் மீது பொய் வழக்கு போட்டு தோற்றுப்போனவர் ஆறுமுக நாவலர்!
நாவலரின் பின்பலமாக நின்றவர்கள் வைதீகர்கள் .
இராமலிங்க வள்ளலார் மீது நிகழ்த்தப்பட்ட கொடிய தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி இதுவரை ஒருவரும் கேள்விகள் எழுப்பியதில்லை.
எந்த ஆத்மீகவாதிகளும் சரி எந்த வைதீக பெருமான்களும் சரி வள்ளலாரின் மறைவு பற்றி வாயே திறக்கவில்லை என்று தெரிகிறது .
எனவே இவர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள்தான்.
தமிழ்நாடு முழுவதும் அறிந்த ஒரு மாபெரும் ஆத்மீகவாதியின் மர்ம மரணம் பற்றி ஒரு ஆத்மீக பெருந்தகைகளும் சந்தேக கேள்வி எழுப்பாமை அவர்களும் கூட்டு குற்றவாளிகள்தானோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது.
வடலூர் ராமலிங்க சுவாமிகள் மர்ம மரணம் சனவரி 30, 1874
ஆறுமுக நாவலர் இறப்பு : திசம்பர் 5, 1879
#சனாதனலீக்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக