tamil.oneindia.com - Shyamsundar : சென்னை; அண்ணாமலைக்கு ப்ரீ ஹேண்ட் கொடுக்க முடியாது என்றுள்ளனர். அதனால் தற்காலிகமாக அவருக்கு கட்டுப்பாடுகள் போட்டுள்ளனர், என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி பிரிவால் உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது.
டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்த பல்வேறு கூட்டங்களில் , ஆலோசனைகளில் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை அண்ணாமலை சந்தித்தார்.
No more free hand for BJP chief Annamalai, Delhi takes a harsh decision on him
இதை தொடர்ந்து நேற்று அவர் பாஜக உயர் மட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.
இதில் பேசிய அவர் , அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது.
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; வாக்கு சதவிகிதம் உயரும்.
பாஜகவை வலிமையடைய செய்வதே என்னுடைய நோக்கம்.
2024 தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி;. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெல்லும். 10 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும், கட்சியை பூத் வாரியாக வலுப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை தனது பேச்சில் குறிப்பிட்டார்.
பேட்டி: இதையடுத்து அண்ணாமலை பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் பேட்டி அளித்துள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக தனி தனியாக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக தனியாக வாக்குகளை பெறும்.. பாஜக எப்படி வாக்குகளை பெறும் என்று தெரியவில்லை. கடந்த முறை லோக்சபா தேர்தலில் இவர்கள் ஒன்றாக கூட்டணி வைத்தனர். அதன்பின் சட்டசபை தேர்தலில் ஒன்றாக இருந்தாலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரிந்தனர். இதனால் இரண்டு தரப்பும் தோல்வி அடைந்தது. இரண்டு தரப்பிற்கும் வாக்கு வங்கி குறைந்தது. இரண்டு தரப்பும் பாதித்தது.
No more free hand for BJP chief Annamalai, Delhi takes a harsh decision on him
அப்படி இருக்க லோக்சபா தேர்தலில் 2024ல் இவர்கள் என்ன செய்வார்கள். வாக்குகள் கண்டிப்பாக பிரியும். இவர்கள் தனித்து இருந்தால் அதிமுக வாக்குகள் மூன்றாக பிரியும். எதிர்க்கட்சிகள் வாக்குகள் நான்காக பிரியும். இது கண்டிப்பாக பாஜகவிற்கும், அதிமுகவிற்கு எதிராக திரும்பும். அண்ணாமலை வாக்கு வங்கி உயர்ந்து உள்ளது என்று நினைக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக ஐந்தரை சதவிகிதம் வாக்குகள் மட்டுமே வாங்கியது.அதுதான் அவர்களின் பலம்.
அதை வைத்துக்கொண்டு அவர்கள் எப்படி வெல்ல முடியும். அவர்கள் எப்படி லோக்சபா தேர்தலில் நிற்க முடியும். அதிமுக வாக்குகள் சப்போர்ட் இல்லாமல் பாஜக மேலும் பின்னடைவை சந்திக்கும். மோடி எதிர்ப்பு வாக்குகள் அப்படியே திமுகவிற்கு செல்லும். திமுக அணி இதனால் சிறப்பாக வெல்லும். அதனால் மேலிடம் அதிர்ச்சியில் உள்ளது. திமுக கண்டிப்பாக வெல்லும் என்ற ரிப்போர்ட் மேலிடத்திற்கு சென்றுள்ளது. அதனால் அண்ணாமலைக்கு இப்போது கட்டு போட்டுள்ளனர்.
கட்சியை தனியாக வளர்க்க வேண்டும் என்று அண்ணாமலை பணி செய்கிறார். இதனால் அவரை மொத்தமாக கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அவருக்கு ப்ரீ ஹேண்ட் கொடுக்க முடியாது என்றுள்ளனர். அதனால் தற்காலிகமாக அவருக்கு கட்டுப்பாடுகள் போட்டுள்ளனர். தற்காலிகமாக அண்ணாமலைக்கு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர். அண்ணாமலையை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லி இருக்கிறார்கள்., என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் பேட்டி அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக