சனி, 7 அக்டோபர், 2023

தெலுங்கானாவிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் - தமிழகத்தை பின்பற்றும் இதர மாநிலங்கள்

தினத்தந்தி : ஐதராபாத் தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் சுமார் 23 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்கும் நோக்கில் முதல்-மந்திரி காலை உணவு திட்டம் தெலுங்கானா மாநிலத்தில் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை மந்திரி கே.டி.ராமராவ், உள்ளிட்ட தெலுங்கானா மந்திரிகள் பல்வேறு இடங்களில் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கிவைத்தனர்.
காலை உணவு திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய மந்திரி கே.டி.ராமராவ், மாநிலம் முழுவதும் உள்ள 27,147 அரசு பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். காலை உண்வு மெனுவில் இட்லி-சாம்பார், கோதுமை, ரவா உப்புமா, பூரி-உருளைகிழங்கு குருமா, கிச்சிடி, தினை இட்லி மற்றும் பொங்கல் உள்ளிட்டவை இருக்கும்.

இதேபோன்ற திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இதை செயல்படுத்த வேண்டும் என்று தெலங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் விரும்புகிறார். உணவின் தரம் பராமரிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளை மந்திரி கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை: