மாலைமலர் : 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுவதாக ராகுல் காந்தி பேசினார்.
பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா உருவாகிவிட்டது- மக்களவையில் ராகுல் காந்தி பாய்ச்சல்
மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:-
ஜனாதிபதியின் உரையில் எந்த பிரச்சினை பற்றியும் ஆழமாக குறிப்பிடப்படவில்லை. நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அந்த உரையில் எதுவும் இல்லை. வேலைவாய்ப்பின்மை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பணக்காரர்களுக்கு ஒன்று, ஏழைகளுக்கு ஒன்று என இரண்டு இந்தியா உள்ளது. இந்த இரண்டுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருகிறது. இன்று, 84 சதவீத இந்தியர்களின் வருமானம் குறைந்து, அவர்கள் வறுமையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். அமைப்புசாரா துறை முற்றிலுமாக அழிந்துவிட்டதால், மேக் இன் இந்தியா என்பது நடக்காத காரியம். இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு இந்தியாவையும் ஒன்றிணைக்கும் பணியை பிரதமர் தொடங்கவேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி காரசாரமாக பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக