M S Rajagopal : கழிவு நீர் குழாய்களில் அடைப்புகளை நீக்கும் ஜெட்ராடர் இயந்திரம் ₹ 25 லட்சத்துக்குள்தான் இருக்கும்.
டாஸ்மாக்கால் தமிழக அரசுக்கு ஒருநாள் வருமானம் 80 கோடி.
மது அருந்தாமல் பாதாள சாக்கடைக்குளேயே செப்டிக் தொட்டிக்கு உள்ளேயோ இறங்கி சுத்தம் செய்ய முடியாது.
அவர்கள் மடியில் இருந்து பிடுங்கும் பணத்தில் அவர்களுக்காக அந்த இயந்திரங்களையாவது வாங்கலாமே!
ஆண்டுக்கு ஒரு நாள் துப்புரவு தொழிலாளர் தினமென்று அன்றைய டாஸ்மாக் கலெக்ஷனையாவது ஜெட்ராடர்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
# சமீபத்தில் ஒரே வாரத்தில் சென்னையை ஒட்டி 3 இளைஞர்கள் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்பொழுது இறந்தனர். ஜனவரி 15ல் கதிரவன் ஈஞ்சம்பாக்கத்தில் இறந்துள்ளார். ஜனவரி 19ல் ராஜேஷ், ஏழுமலை இருவரும் தாம்பரம் வரதராஜபுரத்தில் இறந்துள்ளனர். இந்த மூவருக்கும் 4 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் 30 சுத்திகரிப்பு தொழிலாளிகள் இதுபோல் இறந்துள்ளனர். ஒரு வேலையில் ஈடுபட்டு இருக்கும்பொழுது இறந்து உள்ளனர் என்று இவற்றை கடந்து செல்ல முடியாது. காரணம் கையால் மலக்கழிவு அகற்றும் துப்புரவுத் தொழில் தடைச் சட்டம் 2013 (The Manual Scavenging Prohibition Act 2013) இவர்களுக்காகவே கொண்டு வரப்பட்டது.
மலக்குழியில் மரணிக்கும் மனிதர்கள்! - தொடரும் துயரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக