மாலைமலர் : ஒட்டாவா ,கனடாவில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. மேலும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கனடா அரசும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் உள்ளிட்ட பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
முதலில், கனடாவிலிருந்து சாலை வழியாக பிற நாடுகளுக்கு சென்று வரும் சரக்கு வாகன ஓட்டிகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சரக்கு வாகன ஓட்டிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்க தொடங்கியதில் சுதந்திரப் பேரணி என்ற பெயரில் பெரும் போராட்டமாக உருமாறியது.
சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என பல தரப்பு மக்களும் கையில் பதாகைகளை ஏந்தியபடி கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கொரோனா விதிமுறைகளை நீக்க வலியுறுத்தி பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் பெரும் திரளாக திரண்டனர். பின் பாராளுமன்ற வளாகத்தில் நுழைந்து கன்னட பிரதமருக்கு எதிரான வாசகங்களை கூறி விமர்சித்தனர். இதனால் அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
தற்போது கனடா தலைநகர் முழுவதும் போராட்டம் வலுபெற்ற நிலையில் பாதுகாப்பு கருதி அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் குடும்பத்தினர் ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக