ஞாயிறு, 30 ஜனவரி, 2022

பாஜக அதிரவைக்கும் சொத்து 4847.47 கோடி ரூபாய்கள்

May be an image of 1 person and text that says 'IE सकल्प सिद्धि நாட்டிலேயே பணக்கார கட்சி பாஜக ரூ.4,847 கோடிக்கு சொத்து!'

Chinniah Kasi :   நாட்டிலேயே பணக்கார கட்சி பாஜக ரூ.4,847 கோடிக்கு சொத்து!
29 January 2022 தீக்கதிர்
புதுதில்லி, ஜன.29- தேசிய மற்றும் மாநிலக் கட்சி கள் தாமாகவே அளித்த சொத்து மதிப்பு தொடர்பான தக வல்களில் இருந்து, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப் பின் தேர்தல் கண்காணிப்பு கழ கம் ஆய்வறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது.  அதில், 2019-20 நிதியாண்டில், நாட்டிலேயே அதிகமான சொத்து மதிப்பு கொண்ட கட்சி பாஜகதான் என்று குறிப்பிடப் பிட்டு உள்ளது. 2019 - 2020 நிதியாண்டு கணக் குப் படி, நாட்டிலேயே பாஜக வுக்கு அதிகபட்சமாக 4 ஆயி ரத்து 847 கோடியே 78 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து உள் ளது. அதற்கு அடுத்தபடியாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு 698 கோடி ரூபாய்க்கும், காங்கி ரஸ் கட்சிக்கு 588 கோடி ரூபாய்க் கும் சொத்து உள்ளது.


மாரக் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (ரூ. 569 கோடி), திரிணாமுல் காங்கி ரஸ் (ரூ. 247 கோடி) , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ரூ.29 கோடி), தேசியவாத காங்கிரஸ் கட்சி (ரூ. 8 கோடி) என அடுத்த டுத்த இடங்களில் உள்ளன. இதேபோல மாநிலக் கட்சி களில் சமாஜ்வாதி கட்சி 563 கோடியே 47 லட்சம் சொத்து மதிப்புடன் முதலிடம் வகிக்கி றது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி (ரூ. 301 கோடி) அதிமுக ( 267 கோடி) என இரண்டாது, மூன்றாவது இடங்களில் உள் ளன. இதில், குறிப்பிட வேண்டி யது, 7 தேசியக் கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 6 ஆயி ரத்து 988 கோடியே 57 லட்சம் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன என்றால், இதில், சுமார் 70 சத விகித சொத்துகளை (69.37 சத விகிதம்) பாஜக என்ற ஒரு கட்சி மட்டும் (ரூ. 4 ஆயிரத்து 847 கோடியே 78 லட்சம்)  வைத்தி ருக்கிறது என்பதே ஆகும். தனது சொத்துக்களில், வைப்பு நிதியாக (Fixed Deposit) மட்டும் பாஜக 3 ஆயி ரத்து 253 கோடி ரூபாயை கொண் டிருக்கிறது

புதியதலைமுறை   :பாஜகவிடம் குவிந்துள்ள அதிரவைக்கும் சொத்துக்கள்! ..  இதுதான் இன்றைய இந்தியா.
ஒரு தொழிலில் ஈடுபட்டு பல ஆயிரம் தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தி,
அந்தப் பொருளை சந்தையில் விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கின்ற லாபத்தைக் கொண்டு இயங்குகின்ற முதலாளிகளை விட நாக்கு, சாதுரியமான பேச்சு,
கவர்ச்சிகரமான முழக்கங்கள் இவற்றை மூலதனமாகக் கொண்டு ஏகாதிபத்திய மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு அடிவருடி சேவை செய்வதன் மூலம் கிடைக்கின்ற சன்மானம் ஆகியவற்றின் மூலம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கின்ற நிதியை ஒப்பிட்டுப் பாருங்கள்.
இப்படிப்பட்டவர்கள் கையில்தான் நாட்டின் தலைவிதி சிக்கிக் கொண்டுள்ளது.



அதுமட்டுமின்றி ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கும், உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்கின்ற பணியில் முன்னணியில் நிற்கின்ற பாரதிய ஜனதா கட்சி பிற கட்சிகளுடன் ஒப்பிட தகுந்த கட்சியே அல்ல!
மேலும் தன் இயல்பிலேயே பாசிசத்தை ஆதரிக்கின்ற ஜனநாயக விரோத சித்தாந்தத்தை கொண்டுள்ள கட்சியாகும். இதனால் முதலாளிகளுடன் இசைந்து போகிறது. இதனால் அவர்களின் வருமானமும் இரட்டிப்பாகிறது.

கருத்துகள் இல்லை: