Sathyaperumal Balusamy : பொதுவாகவே கொங்குநாட்டுக்காரர்கள் தன்னலம் அற்றவர்கள். தங்களுடைய உடல் பொருள் ஆவியை இழந்தாவது அடுத்தவன் துன்பத்தைப் போக்கிவிடுவார்கள்.
இப்படித்தான்,
கலைமகள் சபா என்று ஒருத்தன் வந்தான். கோவணத்தில் முடிந்து வைத்திருந்த சில்லறையையும் தூக்கிக் கொடுத்துவிட்டுத் தெருவுக்கு வந்தார்கள்.
அதே போல ஸ்னேகம், அனுபவ் என்று வந்தவன்களையும் பெண்டாட்டி தாலியை அடகுவைத்துக் காப்பாற்றிவிட்டு அழுது புலம்பினார்கள்.
எங்கேயோ ஆஸ்திரேலியாவில் மேய்ந்து கொண்டிருந்த ஈமு கோழிகளைப் பிடித்து வந்து பெருந்துறையில் ஒருத்தன் ஷோ காட்டினான். அவ்வளவு தான்! ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி கணக்காக, இருந்த இரண்டே இரண்டு சென்ட்டு நிலத்தைக் கூட அவனுக்கு எழுதிக் கொடுத்து விட்டு ஏமாந்து போனார்கள்.
இப்படிப் பற்றற்று இருந்த பாவப் பிறவிகளை மீட்கும் பாவனையில் 'அத்தனைக்கும் ஆசைப்படு' என்று அடிவாரத்தில் கடையைப் பரப்பினான் கஞ்சா குடிக்கி ஒருவன். பைத்தியங்களைப் போல பலத்த கரகோஷத்தை எழுப்பிக் கலகலவெனச் சிரித்தபடிக்கு வெள்ளியங்கிரி மலையையே அவனுக்கு வெட்டிக் கொடுத்து விட்டு விசும்புகிறார்கள்.
இப்போது தேர்தல் நேரம்.
முதலைகளும், நீலிகளும், போலிகளும் வந்து புலம்பல் நாடகத்தை அரங்கேற்றுகின்றன.
மூதிஜி வேறு ஒரு பக்கம் மூக்கைச் சிந்துகிறார்
வானதியக்கா ஒருபுறம் வாட்டம் காட்டுகிறார்
கமலதாசன் ஒருபக்கம் கலக்கம் காட்டுகிறார்
கருணை மிகுந்த கொங்குநாட்டார்கள் கோயமுத்துரை மட்டும் கொடுப்பார்களா அல்லது கொங்கு மண்டலத்தையே தூக்கிக் கொடுத்துவிட்டுத் தெருவில் நிற்பார்களா என்று அச்சமாக இருக்கிறது.
அன்பார்ந்த கொங்குநாட்டவர்களே!
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பார்கள். அந்தச் செலவாந்தரம் பலிக்க வேண்டும் என்றால் முதலில் கொங்கு செழிக்க வேண்டும். திருவாத்தான்களைப் போல, திருடன்களுக்குக் கதவைத் திறந்து வைத்து விட்டுக் களவு போய்விட்டது என்று கலங்கிக் கதறாமல்,
திமுக கூட்டணிக்கே உங்களது பொன்னான வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளித் தாருங்கள்.
கொங்கும் செழிக்கும்! எங்கும் செழிக்கும்!!
ஆதரிப்பீர் திமுக கூட்டணி
போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனப் பாத்து
பதிவுக்கு ஊக்கம்: நண்பர் Malar
Vannan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக