திங்கள், 29 மார்ச், 2021

தமிழ்நாடு பாஜகவின் அடிமை மாநிலமாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று சில புலம்பெயர்ந்து ஈழத் தமிழர்கள் கடுமையாக பாடுபடுகிறார்கள்.

 வி. சபேசன்  :  பிஜேபியின் அடிமை மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் சிலர் கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பிஜேபி மெது மெதுவாக பறித்துக் கொண்டிருக்கிறது. நீட்டுகின்ற இடங்களில் எல்லாம் அதிமுக அடிமை அரசு கையெழுத்துப் போட்டு  தமிழ்நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறது.
எதிர்த்து நிற்கின்ற தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஹிந்தியும் சமஸ்கிருதமும் திணிக்கப்படுகின்றன.
தமிழர்களின் இடஒதுக்கீடு உரிமையை இல்லாமல் செய்வதற்கான பல்வெறு சதித் திட்டங்கள் நடக்கின்றன.
மீண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தால், மிச்ச உரிமைகளும் மொத்தமாக பறிக்கப்பட்டு விடும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
6 கோடி தமிழர்களின் எதிர்காலம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் புலம்பெயர்ந்து வாழும் சில ஈழத் தமிழர்கள் வன்மத்துடன் செயற்படுகிறார்கள்.
ஈழ விடுதலைப் போரில் தமிழ்நாட்டு மக்கள் தமக்கு போதுமான உதவிகளை செய்யவில்லை என்று இவர்கள் நம்புகிறார்கள்.


அதற்கு பழி வாங்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில், 6 கோடி தமிழர்களின் எதிர்காலத்துடன் விளையாட இவர்கள் துணிந்து விட்டார்கள்.
ஆயினும் இந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பது மிகக் குறைவுதான்.
சமூக வலைத்தளங்களில் ஒருவரே பல கணக்குகளை உருவாக்கி, தம்மை பலராக காட்டிக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் பக்கமே பெரும்பான்மையான ஈழத் தமிழர்கள் நிற்கிறார்கள்.

Kannan Ramasamy  : நானும் அடிப்படையில் இதே பார்வையை முன்வைக்கிறேன்.
எனக்கு ஏற்பட்ட வலி பங்காளிக்கும் ஏற்படவேண்டும் என்று என்னும் யாழ்ப்பாண-வெள்ளாள சிறுமை எண்ணம்.
தமிழ்நாட்டு மக்கள் சதா சர்வ காலமும் இலங்கையர்களை பற்றி வேதனைப்பட இயலாது. அவனவன், அவனவன் சிக்களைத்தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
RSS என்னும் அசுர ஆயுதம் சிங்களவர் பக்கமே நிக்கும். கனடாவில் வாழும் இவர்களுக்கு இலங்கையில் உள்ள மிச்ச-மீதி தமிழர் என்ன ஆனால் என்ன.. வீம்புக்கு என்றே வாழ்கிறார்கள்

Karthik Raaja  : தமிழ்நாடு எக்கேடு கெட்டால் என்ன என்று அனைத்து ஈழத் தமிழர்களும் சிந்திப்பதாக நினைத்தேன்.. நல்லவேளை உங்களைப் போல் ஓரிருவர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது...

கருத்துகள் இல்லை: