தொடிதோட் செம்பியன் : ஏன் திமுக ஆட்சி வேண்டும் :நேற்று ஒரு மே17 தம்பி ஒரு விவாதத்துல என்கிட்ட சொன்னாப்ள...
நீ,லாம் காலம் முழுதும் இப்படி கட்சிக்கு அடிமையா இப்படி கத்திட்டேதான் இருக்கனும் உனக்கும் கட்சி எதுவும் செய்யாது, மக்களுக்கும் எதுவும் செய்யாதுனு....
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மதம் மாறிய குடும்ப பின்னனி எங்களோட குடும்பம்., எங்கள் குடும்பம் மதம் மாறியதே அந்த ஒடுக்கப்பட்டோம் எனும் சாதிய அடையாளமும் அதனின் பலனால் கிடைக்கும் அவமானங்களும் மாறுவதற்குதான்...முழுதாக மாறியதா என்று கேட்டால்.. மாறவில்லைனுதான் சொல்லனும்...
எங்களோட தாத்தாவோட அப்பா பெயர் குப்பான்டி ( பெரும்பாலான ஒடுக்கப்பட்ட சமூதாயத்தின் மக்களோட பெயர் அந்தகாலத்தில் இப்படியாகத்தான் இருக்கும் பெயர் கூட இப்படித்தான் இழிவாகத்தான் இருக்க வேண்டும் ) அந்த பெயர் பவுல்ராஜ் என மாறியதோடு நின்றது
இத்தனைக்கும் அந்த காலத்திலேயே நிலபுலன்கள் உடைய குடும்பம்தான் அந்த பட்டயங்கள்கூட உண்டு ஆனாலும் இழிநிலையை சுமந்துட்டுதான் இருந்திருக்காங்க..
அப்புறமாக எங்க தாத்தாவோட காலம் திராவிட இயங்கங்கள் தோன்றி அதன் பலன்களால் மக்கள் பலனடைய ஆரம்பித்த காலம்
எங்க தாத்தாவோட பெயர் பால்ராஜ் ஒரு ஆசிரியர்.. எங்கள் பாட்டியை சாதி மறுப்பு காதல் திருமணம் செஞ்சுக்கிட்டாரு அவங்களும் ஒரு ஆசிரியர்... குப்பான்டி குடும்பம் பால்ராஜ் வாத்தியார் குடும்பம் ஆனது ஆனாலும் மேல்நிலை அடைந்துவிடவில்லை...
அதன் பின் எங்களோட அப்பாக்கள், அத்தைகள் காலம் ( இங்கதான் தலைவர் கலைஞர் என்ட்ரி ) எங்க அப்பாவோட பிறத்தது ஏழு பேர்... ஏழு பேரில் மூன்று ஆண்கள் அரசு ஊழியர்கள் ( இரண்டு ஆசிரியர் ஒரு போஸ்ட்டல் டிபார்ட்மெண்ட் ) இரண்டு பெண்கள் ( ஒரு மெடிக்கல் டிபார்ட்மெண்ட் ஒரு எஜிகேஷனல் டிபார்ட்மெண்ட் ) மேலும் இரண்டு அத்தையோட கணவர்களும் அரசு ஊழியர்கள்( ஒருத்தர் CEO ஒருத்தர் Bangalore Railways ல இருக்காரு )
இப்போ எங்களோட காலம்.... அவங்க பிள்ளைகாளான நாங்கள் இல்லாத டிபார்ட்மெண்ட்டே இல்ல... எங்க இல்லத்தில் மட்டுமே..கலைஞர் கொடுத்த கல்வித் திட்டங்களால் மூன்று ஆசிரியர், ஒரு பொறியாளர்..
ஊராட்சியில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கிட்டால் தொடர்ந்து நான்கு முறையாக என்னோட அம்மா ஒரு பஞ்சாயத்து தலைவர்..ஒரு தலித் பெண் தொடர்ந்து இத்தனை முறை பஞ்சாயத்து தலைவியாக எந்த
இடத்திலும் இதுவரை இல்லை...
திமுக கொண்டு வந்த சமூகநீதி பலன்களை சரியாக பயன்படுத்தி உயர்நிலை அடைந்த வாழும் உதாரணங்கள் நாங்கள்...நாங்கள் திராவிடத்தை ஆதரிக்காமல், கலைஞரை கொண்டாடிவிடாமல் வேறு என்ன செய்வது..
சரி இவ்வளவு பேசுரீங்களே உங்க சாதி பெயர் ஒழுந்திடுச்சா என்று கேட்டால் கண்டிப்பாக பெயர் அளவில் ஒழிக்க வேண்டிய விசயம் அல்ல சாதி..மக்களின் மன அளவில் ஒழிக்கப்பட வேண்டிய செயல்பாடு அது..நாம் அடைந்துள்ள சமூக வர்க்க மாற்றம், மேல்நிலை அந்த சாதி ஒழிப்புக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்...அந்த நிலையை எங்களுக்கு கொடுத்தது திராவிடமும் திமுக கொண்டுவந்த சமூகநிதி திட்டங்களும்... அந்த வகையில் அதை செய்து முடித்தோம்..
வர்க்க மாற்ற மேல்நிலையை எங்களுக்கு கொடுத்தது தலைவர் கலைஞரின் சமூகநீதி திட்டங்கள்..தனக்கு கிடைத்த கொஞ்ச கால ஆட்சியில் எங்கள் குடும்பம் போல், பல தமிழக குடும்பங்களின் வளர்ச்சியை டார்வின் கோட்பாடு போல் செதுக்கிய முக்கால கோட்பாடு அவர்...
S.Paul raj sathyam BA,DEEE,DTed,DTTC
(ரெண்டுவருசம் BEகூட படிச்சேன்.. சோ சேட்
அது ஒரு துன்பியல் சம்பவம் )
S.Neethi raj sathyam ME
S.Esther Rajathi sathyam BA,Bed
எங்கள் பிள்ளைகளுக்கான பாதை இங்க தொடங்கிருயிருக்கு.,நாங்கள் வளர்ந்திருக்கோம்...ஆனா விதை போட்டது அவரு...
பலமுறை சொன்னதுதான்,இப்பவும் சொல்ரேன், இனியும் சொல்வேன்...எதையும் எதிர்பார்த்து இல்லை நன்றிக்கடனாக...
திமுக வினால் வாழ்ந்தோம்...அதன் வினையாலே வளர்ந்தோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக