தமிழக அரசியல் களத்தில் நடிகர்கள் நடிகைகள் வருகை புதிதல்ல என்றாலும் திரைக் கலைஞர் ரோகிணி போன்றவர்கள் உழைக்கும் மக்களின் அரசியலை முன்னெடுத்து இடதுசாரி அரசியலோடு பயணிப்பது என்பது பெருமைக்குரிய விஷயமாக கருதுகிறேன். தமிழகத் அரசியலில் திரை நட்சத்திரங்களை தேர்தலுக்கு மட்டுமே காட்சிப் பொருளாக பயன்படுத்துவதும் ஒப்பந்த அடிப்படையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகர் நடிகைகள் மத்தியில் அன்றாடம் உழைக்கும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும்
அனைத்துபிரச்சினைகளிலஅனைத்துபிரச்சினைகளிலும் தன் சரியான தலையீட்டை வெளிப்படுத்தி எந்தவித பந்தாவும் பகட்டும் இல்லாமல் மிகுந்த அரசியல் புரிதலோடு எளிய மக்களின் பிரச்சனைகளை உரக்கச் சொல்லி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தை ஆண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு மக்களை எப்படி வஞ்சித்தது. மோடி தலைமையிலான அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை ஈடுபட்டது உட்பட தனது பிரச்சாரத்தில் மக்களிடம் சொல்லி வருகிறார்..கம்யூனிஸ்டுகளுக்கு உரித்தான மிடுக்கோடு முஷ்டி உயர்த்தி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு தாருங்கள் இடதுசாரிகளை தமிழகத்தில் வலுப்படுத்துங்கள் என்று தனது பிரச்சாரத்தில் ஓங்கி ஒலித்து வருகிறார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக