வெள்ளி, 2 ஏப்ரல், 2021

தேர்தலுக்கு அப்புறம் பழனிச்சாமி அதிமுகவுல இருப்பாரா என்பதே சந்தேகம், எதுக்கு பயப்படணும்ன்னு நினைக்கிறாங்க.

May be an image of 1 person

திருஞானம் ஸ் : உளவுத்துறை, மீடியா , சுனில் டீம் என்று சகல தரப்பும் அதிமுகவின் படு தோல்வியை சொல்லி வந்த நிலையில் பழனிச்சாமி நம்பியது இரண்டே இரண்டை தான்.
1 . Front Page Media Mangement
2 . பணம்
இன்று அது இரண்டுமே அதிமுகவிற்கு கைகொடுக்க வில்லை என்பதை திடீர் என்று உணர்ந்தார் பழனிச்சாமி ?
பல ias ips அதிகாரிகளை உருவாக்கிய பயிற்சி பள்ளியினை நடத்தும் அண்ணன் ஒருவருக்கு கால் செய்து இது பற்றி கேட்டபோது...
தம்பி, தபால் ஓட்டு ஏறக்குறைய முடிஞ்சு போச்சு
கிட்டத்தட்ட திமுக தான் முழுசா வாங்கி இருக்கு.
வயதானவர்கள் ஓட்டு கூட திமுகவிற்கு முழுசா விழுந்திருப்பது பழனிச்சாமிக்கு ஒரு வித எரிச்சலை கொடுத்து இருக்கு,
இப்போ தான் தாங்கள் மக்களை விட்டு எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் மீடியா  மேனேஜ்மென்ட் மட்டும் களத்தில் எதிரொலிப்பது இல்லைன்னு பழனிச்சாமிக்கு புரிஞ்சி இருக்கு.
இறுதி நேரத்தில் பணத்தை அடிக்கலாம்ன்னு ஒவ்வொரு ஊரா கொண்டு போய் சேர்ந்ததில் பாதிக்கு மேல களவு போய்டுச்சு,
சில இடங்களில் பணத்தை எடுத்துகிட்டு ஓடிய ஆட்களை தேடி பிடிக்கும் பணிக்கு காவல் துறையை unofficial ஆ கேட்டு இருக்காங்க.


ஜெயலலிதா இருக்கும் போதே பணத்தை அடிச்ச ஆளுங்க இருந்தாங்க, பழனிச்சாமி எல்லாம் அவர்களுக்கு எங்கத்திய மூலை ?
அதுவும் தேர்தலுக்கு அப்புறம் பழனிச்சாமி  அதிமுகவுல இருப்பாரா என்பதே சந்தேகம், எதுக்கு பயப்படணும் ?ன்னு நினைக்கிறாங்க.
பழனிச்சாமியிடம் பணத்தை அடிச்சது கூட பரவாயில்ல, கூட்டணியில் இருக்கும் பிஜேபியிடம் செமையா கறந்து இருக்காங்க, ஆடு பல கோடியை இழந்துட்டு நிக்குது.
போதாத குறைக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிமுக ஆளுங்க அங்க அங்க pockets கள காலி செய்யும் வேலைய செஞ்சிகிட்டு இருக்காங்க,
மேட்டூர் திராவிட இயக்க பற்றாளர் 'சிகப்பு மலை' ஒரு திமுக வேட்பாளருக்கு பணமே கொடுத்து வெற்றி பெற உதவி இருக்காறாம் " என்று முடித்தார்.
அண்ணே அப்போ திமுகவில் வாய்ப்பு கிடைக்காத ஆளுங்கணே  ? என்றதும் .
" உங்க ஆளு தான் இந்த மாதிரி நுண் அரசியல் செய்வதில் கில்லாடி ஆச்சே, அழகா MLC க்கு பட்டியல் தயார் செஞ்சு எல்லோரையும் off செஞ்சுட்டாரு .
ஆனா அந்த MLC மீள் உருவாக்கம் செம plan, ஒவ்வொரு துறைக்கு ஒரு பிரதிநிதி இருப்பாங்க அது தமிழ்நாட்டிற்கு இப்போது ரொம்ப தேவையான ஒன்று " என்றார்.

கருத்துகள் இல்லை: