இந்நிலையில் வேலு மற்றும் அவரது மகன்களிடம் விசாரணை நடத்தியபோது, ஸ்டாலினின் மருமகன் சபரீசன் குறித்து விசாரித்துள்ளனர். சபரீசன் குறித்து பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினார்கள் என்றும் அப்போது சபரீசனுடன் நெருக்கமாக உள்ள தொழிலதிபர்கள் குறித்தும் வேலுவிடம் கேள்வி எழுப்பினார்கள் என்றும் கூறப்படுகிறது.
அப்போது பெறப்பட்ட சில தகவல்களின் அடிப்படையில், சபரீசனின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த வருவாய் புலனாய்வுத்துறை ஏப்ரல் 2 ஆம் தேதி திடீரென நீலாங்கரையில் உள்ள சபரீசன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
சபரீசனின் நண்பர்கள் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அதில், திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரையின் தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திருவண்ணாமலை மாவட்ட திமுகவினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது</
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக