வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் நாளை மாலை 7மணிக்கு பிறகு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் . பரப்புரை முடிந்த பின் தேர்தல் தொடர்பான எந்த பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அதில் பங்கேற்கவோ கூடாது.
தொலைக்காட்சி, வானொலி, வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவை மூலம் பரப்புரையை வெளியிடக்கூடாது. பொதுமக்களை கவரும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் பரப்புரை செய்யக்கூடாது.
இந்த விதிமுறைகளை மீறினால், சட்டப்பிரிவு 126, 2ன் படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். .
திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள் ஆகிய இடங்களில் வெளி ஆட்கள் இருக்கிறார்களா என கண்காணிக்கப்படும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வேட்பாளர்கள், முகவர்கள் வாகனங்கள் பயன்படுத்தக்கூடாது.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகனம் அனுமதிகள் நாளை மாலை 7 மணி முதல் செல்லாதாகிவிடும்.
வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவுக்கு வெளியே வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தற்காலிக பூத் அமைத்து கொள்ளலாம். ஆனால், இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்
வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போர்டுகள் இருந்தால் அவற்றை பாதுகாக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வகுப்பறையை முழுமையாக சுத்தமாக பராமரிக்க வேண்டும். சுகாதார வழிநெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வினிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக