கடந்த சில ஆண்டுகளில், இடதுசாரிகளைப்போல நாங்களும் செய்து காட்டுகிறோம் என்று கூறி, இந்த மைதானத்தை மக்கள் கூட்டத்தால் நிரப்ப முயற்சித்து சூடு போட்டுக் கொண்டன மம்தாவின் திரிணாமுல் கட்சியும், மதவெறி பாஜகவும். எத்தனையோ முயன்றும் இடதுசாரிகளைப் போல அங்கு ஒரு மானுடசங்கமத்தை அவர்களால் உருவாக்க முடியவில்லை.
வங்கத்தில் இடதுசாரி இயக்கமே இன்னும் பலம் வாய்ந்தது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறது 2021 பிப்ரவரி 28 பிரிகேட் பரேடு பேரணி. வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரி இயக்கத்தையும் அழித்தொழிக்கும் நோக்கத்துடன் கடந்த பல ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கொடிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான தோழர்களை கொன்று குவித்தது. கிராமப்புறங்களில் செங்கொடிகளை ஏற்றிய எவரும் தப்ப முடியாத என்ற கொடியசூழலை உருவாக்கியது. செங்கொடி குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மீது திரிணாமுல் குண்டர்கள் பாலியல் வன்கொடூரங்களை ஏவியதையும், அவர்கள் மீது வெள்ளைச் சேலையை வீசியெறிந்து உனது கணவன் மார்க்சிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறாவிட்டால் இந்த சேலைதான் உனக்கு நிரந்தரம் என்றெல்லாம் குரூரமான, மனிதத்தன்மையற்ற, எழுத்தில் வடிக்க முடியாத கொடூரங்களையெல்லாம் ஏவியதையும் சொல்லி மாளாது.
ஆனால் மம்தா கட்சியின் இந்த பேயாட்டத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடது முன்னணியும் மிகுந்த தீரத்துடன் எதிர்கொண்டன. படிப்படியாக அனைத்து கிராமங்களிலும் நம்பிக்கையை ஏற்படுத்தி, மம்தா ஆட்சியின் கொடுமைகளையெல்லாம் எதிர்த்து போராட்டக்களத்தில் மக்களை இறக்கின. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள்,மாணவர்,இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரையும்இடது முன்னணி திரிணாமுல் ஆட்சிக்கெதிராகவும், திரிணாமுல்லுடன் கைகோர்த்தும் பின்னர் அதை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டும் வங்கத்தில் மதவெறி நஞ்சை பரப்ப தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு எதிராகவும் இடைவிடாத போரா.ட்ட பேரலைகளை உருவாக்கியது. அதுமட்டுமின்றி, தேர்தல் களத்தில் இவ்விரு கட்சிகளையும் துடைத்தெறியும் விதத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளுடன் தேர்தல் புரிந்துணர்வையும் உருவாக்கியது. இத்தகைய பின்னணியில் தான், தேர்தல் பிரச்சாரத்தின் பிரம்மாண்ட துவக்கமாக பிரிகேட் பரேடு மைதானத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தியிருக்கிறது. வெற்றியை பறைசாற்றும் அணிவகுப்பு இ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக