.anegun.com :கோலாலம்பூர் | பிப்பரவரி 28:-
இந்தியாவை மையமாகக் கொண்டு தீவிர மதவாதத்தையும் மற்ற மதங்கள் மீது வெறுப்புணர்ச்சியையும் புகுத்தி வரும் மத இயக்கம் ஒன்று, தற்போது சில புல்லுருவிகளால் கொல்லைப்புறம் வழியாக மலேசியாவில் நுழைந்து வருவது அரசுக்குத் தெரியவந்துள்ளதாக ம.இ.காவின தேசியத் துணைத் தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்ததாக தமிழ் லென்ஸ் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின் வருமாறு: இவர்களின் நடவடிக்கைகளை அரசாங்கம் 24 மணி நேரம் கண்காணித்து வருகிறது.
பல்லின மக்கள் வாழும் நாட்டில், பலரது சமயத்திற்கு மதிப்புக் கொடுத்து
வாழ்ந்து வரும் மலேசியா நாட்டில், மதத் தீவிரவாதத்தை செய்து, நாட்டு
மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது, மலேசிய
அரசியலமைப்புச் சட்டம் பாயும் என டத்தோ ஸ்ரீ சரவணன் எச்சரித்துள்ளார்.
இந்தியாவை மையமாகக் கொண்ட அந்த மதம் சார்ந்த இயக்கத்தின் பரப்புரைகள்,
ஒற்றுமையைக் கடைப்பிடிக்கும் மலேசியாவிற்குச் சரிவராது. இந்த ஊடுருவல்
நாட்டிற்குப் பேராபத்தை விளைவிக்கும் என்பதால், அரசாங்கம் இவர்கள் மீது
தீவிர கண்காணிப்பில் இருப்பதாக, டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக