தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வருகிற 10-ந்தேதி வெளியிடப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
nakkeeran : தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க.- காங்கிரஸ் இடையே இழுபறி நிலை நீடிக்கும் நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், மேலிடப் பார்வையாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்... எனக் கூறியவாறு கண்கலங்கினார்.
இந்த நிலையில், தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று (05/03/2021) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது. காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிக்கும் மன சங்கடம் இருக்கத்தான் செய்யும். தி.மு.க. கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை; விரைவில் அனைத்தும் இறுதி செய்யப்படும். நாங்கள் ஒருபோதும் எந்தக் கட்சியையும் தவறாக நடத்தியதில்லை. அரசின் முறைகேட்டை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டிய கடமை தி.மு.க.வுக்கு உள்ளது" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக