இதற்கிடையே,
நேற்று இரவு காரைக்கால், விழுப்புரம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை
வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா
நட்சத்திர ஓட்டலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்த
சந்திப்பின்போது பா.ஜ.க. தரப்பில் மத்திய மந்திரிகள் வி.கே.சிங்,
கிஷன்ரெட்டி, பா.ஜ.க. பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மாநில தலைவர்
எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க.
எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, அ.தி.மு.க-பா.ஜ.க.
இடையே தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது.
இந்த
ஆலோசனையில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி
செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி, கோவை, திருச்சி, வேலூர்
மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக
கூறப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின்
எண்ணிக்கை முடிவு ஆகலாம் என்று தெரிகிறது. பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவு
வரை நீடித்தது.
கடந்த தேர்தல்களில்
‘குறிப்பிடத்தக்க’ எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற 60 தொகுதிகளின்
பட்டியலை பாஜக கொடுத்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை விட அதிகமான
எண்ணிக்கையில் தொகுதி கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தேர்தலில்
பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பாஜகவுக்கு
ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக