ஈடுபடப் போகின்றன
இன்றைய பதிவில்
தமிழ்நாட்டில் இதுவரை நடந்த தேர்தல் குறித்து சிறிய வரலாற்று செய்திகளை பார்க்கலாம்
என்று நினைக்கிறேன்
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 234
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39
1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன
ஒன்று சட்ட மேலவை
மற்றொன்று சட்டமன்றம்
மாநகராட்சிகள்
நகராட்சிகள்
பேரூராட்சிகள்
ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையோ ஆளுகின்ற அரசின்
சூழ்நிலைக்கு ஏற்ப,
தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது
இந்திய தேசிய காங்கிரஸ்
1885இல் தொடங்கப்பட்டது
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது அது இந்தியா முழுவதும் வியாபித்து இருந்தது
தமிழகத்திலும்தனிப் பெரும் கட்சியாக திகழ்ந்தது
1916 ஆம் ஆண்டு
டாக்டர் நடேசன்
டிஎம் நாயர்
மற்றும் தியாகராசர் ஆகியோருடன்
இணைந்து நீதிக்கட்சி நிறுவப்பட்டது
அன்றைக்கு இருந்த சென்னை மாகாணத்தில்
1920 இல் நடந்த தேர்தலில்
98 தொகுதிகளில் 63 தொகுதிகளில் தொகுதிகளில் வெற்றி பெற்று நீதிக்கட்சி பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது
அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார் இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட கொள்கையை கருத்து வேறுபாடு காரணங்களால் நீதிக் கட்சியில் சேர்ந்தார்
1944ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் தலைவராக தந்தைபெரியார் பொறுப்பேற்றார்
பின்பு நீதிக்கட்சியை
திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார்
இதற்கிடையே இந்திய நாடு ஆங்கிலேயரிடம் இருந்து
விடுதலை பெற்றது
இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றது
தமிழ்நாட்டில் 1950 ஜனவரி 27 இல் இருந்து 1952 ஏப்ரல் 9 வரை
805 நாட்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
பி எஸ் குமாரசாமி ராஜா
விடுதலைக்குப் பின்பான அமைச்சரவையில் முதல் முதலமைச்சராக பதவி வகித்தார்
சிறிது காலத்திற்குள்ளேயே காங்கிரஸ்கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
ராஜாஜி (எ) சி ராஜகோபாலாச்சாரி
1952 ஏப்ரல் 10ம்்தேதி முதல்1954 ஏப்ரல் 13-ஆம் தேதி வரை
733 நாட்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தார்
அவரும் காங்கிரஸ் கட்சியின் கருத்து வேறுபாடு காரணமாக முதலமைச்சர் பதவியை துறந்தார்
அதன் பிறகு தமிழக முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றார்
காமராஜர் 1954 ஏப்ரல் 13 ஆம் தேதியிலிருந்து 1963 அக்டோபர் இரண்டாம் தேதி வரை 2349 நாட்கள் முதல்வராக இருந்தார்
காங்கிரஸ் கட்சியை புனரமைக்க வேண்டும் என்று சொல்லி
காமராஜர் மூத்த தலைவர்கள் எல்லாம் முதலமைச்சர் மற்றும்அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று சொல்லி " K "பிளா ன் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது முன்னுதாரணமாக
அவரே விலகினார்
காமராஜருக்கு பிறகு
எம் பக்தவச்சலம் 1963 அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியிலிருந்து
1967 பிப்ரவரி 28ஆம் நாள் வரை
1745 நாட்கள் முதலமைச்சராக பொறுப்பிலிருந்தார்
தந்தை பெரியாரிடம் இருந்து மாறுபட்ட கருத்தை கொண்ட
அறிஞர் அண்ணா 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கத்தை உருவாக்கினார்
1964 -65 ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டுவந்தது
1967 ல் நடந்த பொதுத்தேர்தலில் பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு பெரும் வெற்றி கிட்டியது
அறிஞர் அண்ணா
1967 மார்ச் 6ஆம் தேதியிலிருந்து
1969 பிப்ரவரி 3ஆம் தேதி-ஆம் தேதி வரை
700 நாட்கள் மட்டுமே முதல் அமைச்சராக பொறுப்பு வகித்தார்
1969ம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வரானார்
அண்ணாவின் இறப்புக்கு பிறகு தற்காலிக முதல்வராக இரா.நெடுஞ்செழியன் 1969 பிப்ரவரி முதல் 4 முதல் பிப்ரவரி 9 வரை
ஐந்து நாட்கள் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தார்
தலைவர் கலைஞர் 1969 பிப்ரவரி 10ஆம் தேதியிலிருந்து 1971 ஜனவரி 5ஆம் தேதி வரை 694 நாட்கள் பதவியிலிருந்தார்
1971 ல் நடை பெற்ற தேர்தலில் பெருவாரியான வெற்றியைப் பெற்ற தலைவர் கலைஞர்
1971 மார்ச் 15ல் இருந்து 1976 ஜனவரி 31 வரை
1783 நாட்கள் தமிழக முதல் அமைச்சராக பணியாற்றினார்
1972இல் திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர் அதிமுக எனும் தனிக்கட்சி தொடங்கினார்
தமிழ்நாட்டில் இதுவரை நான்கு முறை குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
முதல் முறையாக 1976 ஜனவரி 31 அன்று திமுக ஆட்சி கலைக்கப்பட்டு 1977 ஜுன் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது
தனிக் கட்சியை ஆரம்பித்த எம்ஜிஆர் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று தமிழக முதல்வரானார்
எம் ஜி ஆர்
1977 ஜுன் 30ம் தேதியில் இருந்து 1980 பிப்ரவரி 17 வரை அதாவது
962 நாட்கள் பதவியில் இருந்தார்
1980 பிப்ரவரியில் எம்ஜிஆரின் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது
மீண்டும் 1980 தேர்தலில் வெற்றி பெற்ற எம்ஜிஆர் 1980 ஜூன் 9ம் தேதியிலிருந்து 1984 நவம்பர் 15 வரை தமிழக முதல்வராக 1620 நாட்கள் பொறுப்பு வகித்தார்
எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவர் அமெரிக்கா செல்ல நேர்ந்தது
அந்த நேரத்தில் தற்காலிக முதலமைச்சராக இரா நெடுஞ்செழியன் அவர்கள் 1984 நவம்பர் 16ம் தேதியிலிருந்து 1985 பிப்ரவரிஒன்பதாம் தேதி வரை
85 நாட்கள் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார்
அமெரிக்காவில் இருந்து வந்த எம்ஜிஆர் மீண்டும் 1985 பிப்ரவரி பத்தாம் தேதியில் இருந்து 1987 டிசம்பர் 24 அவர்இறக்கிற வரை மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தார்
1987 இறுதியில் எம்ஜிஆர் மறைந்து போகிறார் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு மூன்றாவது முறையாக தற்காலிக முதல்வராக நெடுஞ்செழியன் 1987 டிசம்பர் 25ம் தேதியிலிருந்து 1988 ஜனவரி 6ஆம் தேதி வரை தற்காலிக முதல்வராக பொறுப்பில் இருந்தார்
எம்ஜிஆர் மறைந்து போக குழப்பமான நேரத்தில் அதிமுக உடைந்து இரண்டாகிறது
அந்த நேரத்தில் எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி அவர்கள் 1988 ஜனவரி 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்று
1988 ஜனவரி 30-ஆம் தேதி வரை பதவியில் இருந்து 23 நாட்கள் பதவியிலிருந்து பின் விலகி விடுகிறார்
குறுகிய காலமே எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி எம்.ஜி.ஆர் முதல்வர் பதவியில் இருந்தார்
ஜானகி எம் ஜி யார் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது குடியரசு ஆட்சி தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது
1989ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார்
1989 ஜனவரி 27 ஆம் தேதியில் இருந்து 1991 ஜனவரி 30-ஆம் தேதி வரை 733 நாட்கள் தலைவர் கலைஞர் ஆட்சியில் இருக்கிறார்
1991 ஜனவரி 30-இல் தலைவர் கலைஞர் அவர்களின் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி
அமல் படுத்தப்பட்டது
1991 இல் நடந்த தேர்தலில்
1991 ஜூன் 24முதல் 1996 மே 12வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தார்
1996 இல் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா பெரும் தோல்வி கண்டார்
1996 மே 13 முதல் 2001 மே 13 வரை 1826 நாட்கள் தலைவர் கலைஞர் தமிழக முதலமைச்சராக பதவியில் இருந்தார்
இந்த காலங்களில் திமுகவை விட்டு விலகிய வை. கோபால்சாமி ம தி மு க என்ற ஒரு கட்சியை உருவாக்கினார்
2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 2001 மே மாதம் 14ம் தேதியிலிருந்து 2001 செப்டம்பர் 21 வரை 130 நாட்கள் பதவியில் இருந்தார்
ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகிய ஜெயலலிதா
ஓ பன்னீர்செல்வம் அவர்களை
2001 செப்டம்பர் 21ம் தேதியிலிருந்து 2002 மார்ச் 1ஆம் தேதி வரை 160 நாட்கள் முதன்முறையாக முதலமைச்சராக பதவி வகிக்க வாய்ப்பளித்தார்
ஆண்டிபட்டியில் போட்டியிட்டு வென்ற ஜெயலலிதா
2002 மார்ச் 2 ஆம் தேதியிலிருந்து 2006 மே 12 வரை
1532 நாட்கள்
மூன்றாவது முறையாக முதல் அமைச்சராக பதவி வகித்தார்
இந்த காலங்களில் சினிமா நடிகர் விஜயகாந்த் தேமுதிக என்ற ஒரு கட்சியை தொடங்கினார்
2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது
தலைவர் கலைஞர்
2006 மே 13 ஆம் தேதியிலிருந்து
2011 மே 15ஆம் தேதி வரை
1828 நாட்கள் முதல் அமைச்சராக பணிபுரிந்தார்
2011-இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது விஜயகாந்தின் தேமுதிக அப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது
2011இல் மே 16-ம் தேதியில்
முதலமைச்சராக பொறுப்பெற்ற ஜெயலலிதா
2014 செப்டம்பர் 27 வரை 1230 நாட்கள் நான்காவது முறையாக முதலமைச்சர் பதவியில் இருந்தார்
மீண்டும் ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகிய ஜெயலலிதா
ஓ பன்னீர்செல்வம் அவர்களை
2014 செப்டம்பர் 29ஆம் தேதியிலிருந்து
2015 மே 22ஆம் தேதி வரை
235 நாட்கள்
இரண்டாவது முறையாக
முதல் அமைச்சராக பொறுப்பு வகிக்க வாய்ப்பளித்தார்
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது
ஆர் கே நகரில் வெற்றி பெற்ற ஜெயலலிதா 2015 மே மாதம் 23ஆம் தேதி பொறுப்பேற்று 2016 டிசம்பர் 5ஆம் தேதி வரை
562 நாட்கள் முதல் அமைச்சராக பொறுப்பு வகித்தார்
ஊழல் குற்றச்சாட்டில் கர்நாடக நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு பிறகு
2016 டிசம்பர் 6ஆம் தேதியிலிருந்து 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி வரை
70 நாட்கள்
மூன்றாவது முறையாக
ஓ பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பொறுப்பு வகித்தார்
அடுத்து நடைபெற்ற பதவிப் போட்டியில் எடப்பாடி பழனிசாமி
2017 பிப்ரவரி 16ம் தேதியிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 1470 நாட்கள் பதவியில் இருந்து வருகிறார்
தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தவர்களில் தலைவர் கலைஞர் அவர்கள் தான் அதிக நாட்கள் முதல்வர் பதவியில் இருந்திருக்கிறார்
அதாவது
தலைவர் கலைஞர் 6863 நாட்கள்
ஜெயலலிதா 5238 நாட்கள்
எம்ஜிஆர் 3,629 நாட்கள்
காமராஜர் 3432 நாட்கள்
எடப்பாடி பழனிச்சாமி 1470 நாட்கள்
எம் பக்தவச்சலம் 1245 நாட்கள்
பி எஸ் குமாரசாமி ராஜா 805 நாட்கள் ராஜாஜி 733 நாட்கள்
அறிஞர் அண்ணா 700 நாட்கள்
ஓ பன்னீர்செல்வம் 466 நாட்கள் ஜானகி எம்ஜிஆர் 23 நாட்கள்
கட்சி வாரியாக தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள்
அதிமுக 10922 நாட்கள்
காங்கிரஸ் 8425 நாட்கள்
திமுக 7568 நாட்கள்
நீதிக்கட்சி 4497 நாட்கள்
சுயேச்சை 1527 நாட்கள்
இந்த நாட்டிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்த காங்கிரஸ்
தமிழ்நாட்டை ஆண்ட காலம்
8425 நாட்கள்
இந்த நாட்டி ல் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய நீதிக்கட்சி
ஆண்ட காலம்
4,497 நாட்கள்
பகுத்தறிவையும் சுயமரியாதையையும்
இனம்
மொழி
நாடு என்ற உணர்வை
ஏற்படுத்திய திமுக ஆண்டகாலம்
7568நாட்கள்
சினிமா நடிகர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு
சினிமா நடிகை ஒருத்தியால் வளர்க்கப்பட்டு
நாட்டை சுரண்டி கொழுத்த
ஒரு கூட்டம் ஆண்ட காலம்
10922 நாட்கள்
இதுதான் தமிழ்நாடு
இன்பத் தமிழ் நாடு
நண்பர்களே
சென்னை ( மாகாணம் ) மாநிலம்
தற்போதைய தமிழ் நாடு மாநிலத்திற்கு முந்தையது
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்திய அரசுச் சட்டம் 1919 இயற்றப்பட்ட பின் சென்னை மாகாணத்தில் 1920 ல் முதன்முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது
அப்போதைசட்டப்பேரவையின் ஆட்சிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது
132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்
அதன் பிறகு இந்திய அரசு சட்டம் ஆறு 1935 ன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும்
56 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மேலவையும்உருவாக்கப்பட்டது
1920 இல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களின் பெயர்களைப் பார்ப்போம்
சென்னை மாகாணத்தின்
முதல் முதலமைச்சராக தென்னிந்திய நல உரிமை சங்கத்தைச் சேர்ந்த
ஏ.சுப்பராயலு
என்பவர்
1920 டிசம்பர் 17 ல்பதவியேற்று
1921 ஜூலை 11 வரை
206 நாட்கள் முதல் அமைச்சராக
பதவி வகித்து இருக்கிறார்
இரண்டாவதாக
பனகல் ராஜா
தென்னிந்திய நல உரிமை சங்கத்தைச் சேர்ந்த இவர்
1921 ஜுலை 11 ல் பதவியேற்று
1923 செப்டம்பர் 11 வரையும் 792 நாட்கள் பதவி வகித்தார்
பனகல் ராஜா
மீண்டும் 1923 நவம்பர் 19ஆம் தேதி பதவியேற்று
1926 டிசம்பர் 3ஆம் தேதி வரை அதாவது 1111நாட்கள் பதவி வகித்தார்
அதன்பிறகு
டாக்டர் சுப்பராயன்
1926 டிசம்பர் 4ஆம் தேதி பதவி ஏற்று
1930 அக்டோபர் 27 வரை 1423 நாட்கள் முதல் அமைச்சராக பதவி வகித்தார்
பி முனுசாமி நாயுடு
தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தைச் சேர்ந்த இவர்
1930 அக்டோபர் 27ல் பதவி ஏற்று 1932 நவம்பர் மாதம் நாலாம் தேதி வரை முதலமைச்சராக 740 நாட்கள் பதவி வகித்தார்
ராமகிருஷ்ண ரங்காராவ்
இவரும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தைச் சேர்ந்தவர்
1932 நவம்பர் மாதம் 5-ம் தேதியிலிருந்து 1936 ஏப்ரல் மாதம் நான்காம் தேதி வரை 1246 நாட்கள் முதல் அமைச்சராக பதவி வகித்தார்
பி டி ராஜன்
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்ந்தவர்
1936 ஏப்ரல் 4ஆம் தேதியில் ஆரம்பித்து 1936 ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை 142 நாட்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தார்
ராமகிருஷ்ண ரங்காராவ்
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்ந்த இவர்
19 36 ஆகஸ்டு மாதம் 24ஆம் தேதி ஆரம்பித்து
1937 ஏப்ரல் வரை
220 நாட்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தார்
கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
சுயேச்சையான இவர்
1937 ஏப்ரல் 1லிருந்து
1377 ஜூலை 14 வரை
104 நாட்கள் முதலமைச்சராக
பதவி வகித்தார்
ராஜாஜி
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர்
1937 ஜூலை 16 இல் இருந்து
1939 அக்டோபர் 29 வரை
837 நாட்கள் முதலமைச்சராக இருந்தார்
1939 அக்டோபர் 29 இல் இருந்து
1946 ஏப்ரல் 30 வரை 2375 நாட்கள் ஆளுநர் ஆட்சி தமிழ் நாட்டில் நடந்தது
த. பிரகாசம்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்
1946 ஏப்ரல் 30 முதல்
1947 மார்ச் 23 வரை
327 நாட்கள் முதல்வராக இருந்தார்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்
1947 மார்ச் 23 முதல்
1949 ஏப்ரல் 6 வரை
745 நாட்கள் முதல்வராக இருந்தார்
பிஎஸ் குமாரசாமி ராஜா
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் 1949 ஏப்ரல் 6 முதல்
1950 ஜனவரி 26 வரை 295 நாட்கள் முதல்வராக இருந்தார்
ஆனால் ஒரே ஒரு செய்தி மட்டும்
இந்த பரந்து விரிந்த தமிழ்நாட்டை இத்தனை முதலமைச்சர்கள் ஆண்டிருக்கிறார்கள்
ஆடிய ஆட்டமென்ன?
தேடிய செல்வம் என்ன ?
திரண்டதோர் சுற்றம் என்ன ?
கூடு விட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன?
என்று பாடினானே கண்ணதாசன்
அப்படி
ஆடினார்கள்
பாடினார்கள்
தேடினார்கள்
எண்ணிப் பார்த்தால் எத்தனை முதலமைச்சர்கள் இந்த நாட்டில்
முன்னாள் முதலமைச்சர்கள் இப்பொழுது எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள்
தெரியுமா நண்பர்களே!!
ஒரே ஒருவர் தான்
அதுவும்
ஓ பன்னீர்செல்வம் தான் .....
நண்பர்களே
நாளை சந்திப்போமா !!
அறியாமை அடிமைத்தனம் விலக்கு
பகுத்தறிவு சுயமரியாதை பழக்கு
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக