இந்நிலையில், திமுக மற்றும் அதன்
கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகி
உள்ளது.
இதன்படி, காங்கிரஸ்-க்கு 25 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு
7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 இடங்கள், மதிமுகவுக்கு 5
இடங்கள், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக
தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2
இடங்கள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள், கொங்குநாடு மக்கள் தேசிய
கட்சிக்கு 2 இடங்கள், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படலாம்
என தகவல் வெளியாகி உள்ளது.
56 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கி விட்டு, 178
இடங்களில் திமுக நேரடியாக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படும்
நிலையில், மதிமுக, விசிகவுக்கு தலா ஒரு இடம் குறையவும்,
திமுகவுக்கு இரண்டு இடங்கள் உயரவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக