சனி, 6 மார்ச், 2021

விசிகவின் 6 தொகுதிகளில் வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்..

* செய்யூர்(தனி) - பனியூர் பாபு
* காட்டுமன்னார்கோவில்(தனி) - சிந்தனை செல்வன்
* வானூர்(தனி) - எழில் கரோலின்
* திட்டக்குடி(தனி) - பாரிவேந்தன்
* உளுந்தூர்பேட்டை - முகமது யூசுப்
* மயிலம் - பாலாஜி

tamil.samayam.com :தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியானது தொகுதி பங்கீடு குறித்து ஒரு மாதத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த சூழலில் நேற்று முன்தினம் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கையொப்பம் இட்டனர்.,,,

,ஆனால் 6 தொகுதிகள் போதுமானதாக இல்லை என்று தனது கட்சியினர் அதிருப்தி தெரிவித்ததாக திருமாவளவன் வேதனைப்பட்டார். இதில் தனக்கும் கூட சஞ்சலம் இருப்பதாக கூறியிருந்தார். இதுதொடர்பாக பேசிய அவர், சனாதன சக்திகள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடக் கூடாது. இந்த தேர்தல் சனாதன சக்திகளை வீழ்த்த வேண்டிய போர். தமிழகம் மற்றும் புதுச்சேரியை குறிவைத்து செயல்படும் பாஜகவை தோற்கடிக்கப்பட வேண்டும். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தில் தனக்கான செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள பார்க்கிறது.தமிழக பாஜக வேட்பாளர்கள் யார் யார்? 

இதோ உத்தேச பட்டியல்! அதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது. மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்று கருதி திமுகவிற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். ஏற்கனவே கூறியபடி விடுதலை சிறுத்தைகள் தனிச் சின்னத்தில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,

* செய்யூர்(தனி) - பனியூர் பாபு
* காட்டுமன்னார்கோவில்(தனி) - சிந்தனை செல்வன்
* வானூர்(தனி) - எழில் கரோலின்
* திட்டக்குடி(தனி) - பாரிவேந்தன்
* உளுந்தூர்பேட்டை - முகமது யூசுப்
* மயிலம் - பாலாஜி

கருத்துகள் இல்லை: