Sivakumar Shivas: · வெறும் ஐம்பது வருடத்திற்கு முன்பு இரானிய பெண்களும் ஆப்கானித்தனியா பெண்களும்....இவ்வளவு சுதந்திரமாக இருந்திருக்கிறார்கள். இந்த இரு நாடுகளும் தொன்றுதொட்டு இஸ்லாமிய நாடுகள் தான்! ஏன் இப்போது குப்பை பைகள் போல் புர்காவினுள் அடைக்கப்பட்டார்கள்? ஏன் இந்த மாற்றம்? திடீரென்று கண்ணியத்திற்கு கூடுதல் தேவை எங்கிருந்து வந்தது!
Radha Manohar :ஆப்கானிஸ்தானிலும் ஈரானிலும் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான பொது ஆடை என்பது வெள்ளை நிற காட்டன் அல்லது காட்டன் போலியெஸ்டர் ஷேர்ட்டும் நீல நிற டெனிம் ஜீன்சும்தான் ஆண்பெண் பேதமின்றி இளையோர்கள் எல்லோரும் அணியும் ஆடையாக அது இருந்தது. அதிலும் அப்போதெல்லாம் ஆண்களா அதிகம் புகைப்பது பெண்களா அதிகம் புகைப்பது என்று கண்டுகொள்ள முடியாத அளவு சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்தது.
குறிப்பாக படித்த பெண்களின் தொகை அதிகமாக இருந்தது அதிலும் அவர்கள் ஆங்கிலத்தில் மேலோங்கி இருந்தார்கள்
ஈரான் மன்னர் ஷாவின் ஆட்சியில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று படிப்பதற்கு அரசு பணம் வழங்கப்பட்டது .
அந்த படித்த வர்க்கத்தை பார்த்து படிக்காத ஆண்களுக்கு பொறாமை உண்டானது தங்கள் சமூகத்தில் வேகமாக விழுந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தார்கள்.
அவர்களுக்கு அப்போது வந்து சேர்ந்தான் கொமேனி என்றொரு கிறுக்கன்.
இதிலும் ஒரு வேதனையான வேடிக்கை மேற்கு நாடுகளுக்கு சென்று படித்த இளையோர்கள் ஆண்பெண் பேதமின்றி கொமேனியின் சீமானிய பேச்சுக்களால் கவரப்பட்டார்கள்.
இன்று இட ஒதுக்கீட்டினால் படித்து முன்னேறிய பலர் இட ஒதுக்கீடு கூடாது என்கிறார்களே அதே போன்று மேற்கு நாட்டின் சுதந்திர சிந்தனையின் அத்தனை வளங்களையும் அனுபவித்து கொண்டே அவற்றிக்கு எதிராக அணிதிரண்டார்கள்.
தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிவாரி போட்டுக்கொண்டனர் . இன்னும் மீள முடியவில்லை..
இந்த நாடுகளில் உள்ள பெண்கள் பெரும்பாலும் இஸ்லாமுக்கு எதிரான ஒரு மனோ நிலையில்தான் உள்ளனர் ஆனால் அந்த உணர்வை வெளிப்படுத்த பயப்படுகிறார்கள்
Sivakumar Shivas:
Freeman Fazil : Afghan women before Thaliban |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக