puthiyathalaimurai.com :இது முடிவுக்கு வந்ததும் தான் சின்னத்தை பிரதானமாக கொண்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். தேர்தலுக்கு சரியாக ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் எவ்வாறு அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களும் மக்களை கவர்ந்து தேர்தலில் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. >இந்த நிலையில் திமுகவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் சலசலப்பு நீடிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒருபக்கமும் இடதுசாரிகள் ஒருபக்கமும் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.>காரணம் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளை கேட்டு வருகிறது. அதிமுகவில் இரண்டாவது இடத்தில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு எதிரான பாஜகவுக்கு 25 சீட்டுகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாமகவே 23 சீட்டுகள் வாங்கும்போது பாஜக கண்டிப்பாக 25 சீட்டுகளாவது வாங்கும் என காங்கிரஸ் கட்சி எண்ணுகிறது. இதனால் தங்களுக்கும் 25 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி திமுகவை வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக தரப்பில் 18 சீட்டுகள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க இடதுசாரிகளும் கடும் அதிருப்தியில் இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியலையும் இந்திய கம்யூனிஸ்ட கட்சி 12 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியலையும் திமுகவிடம் அளித்திருந்தது. ஆனால் திமுக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் திமுக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கும் அழைக்க வில்லை என கூறப்படுகிறது. திமுக இந்த அளவிற்கு முரண்டு பிடிக்க என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.>திமுக கடந்த முறை 180 தொகுதிளில் போட்டியிட்டது. அப்போது கூட்டணி கட்சிகள் குறைவு. ஆனால் இப்போது திமுக அதே 180 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதனால் கூட்டணி கட்சிகளுக்கு முடிந்தவரை தொகுதிகளை குறைத்து கொடுக்க முன் வந்திருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக