p> Vigneshkumar - tamil.oneindia.com :சென்னை: வரும் சட்டசபை தொகு பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்திருந்த நிலையில், அக்கட்சியில் தலைவர் வேல்முருகன் இன்று காலை 11 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் திமுகவும், அதிமுகவும் மும்முராக ஈடுபட்டு வருகிறது.
இதுவரை அதிமுக தரப்பில் பாமகவுக்கு 23 தொகுதிகளும் பாஜகவுக்கு 20 சட்டசபை தொகுதிகளும் ஒரு நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன
அதேபோல திமுக தரப்பில் இதுவரை இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மமக ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இழுபறியில் உள்ளது.
இன்று தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேச இன்று காலை 11 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இந்த முறை தொகுதிப் பங்கீட்டில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளிடம் மிகவும் கறாராகவே நடந்து வருகிறது.
தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் திமுக ஒற்றை இலக்கிலேயே தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில், கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்புகளை வேல்முருகன் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக