அப்ப மனிதனுக்கு எதுதான் உணவு ? ...மனிதன் தன் உணவை தானே உருவாக்க வேண்டும்..இது வரை நாம் உணவை உருவாக்கவே இல்லை ..இறைச்சியை உருவாக்கச்சொன்னால் கோழியின் பிய்ந்த இறக்கை, உரித்ததோல் என்று குப்பையை தான் உருவாக்கினோம்..
இறைச்சி அந்த குப்பைகளுகுள் ஏற்கனவே இருந்தது தான். நாம் உருவாக்கியது குப்பை மட்டுமே .
தற்பொழுது சிங்கப்பூரில் இறைச்சியை லேபில் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர் ...இப்பொழுது தான் மனிதன் தன் முழு பரிணாமத்தை எட்டியுள்ளான்..
இனி நம் உணவு சோதனை சாலைகளில் உருவாகும் காலம் விரைவில் வரலாம் .
என்ன ஒரு பிரச்சினை என்றால் ..லேபில் உருவானதால் இது சைவமா அசைவமா என்பதில் அந்த கோழி கொக்கரக்கோனு கத்தல அதனால சைவமாக்கப்படலாம்..
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற இடத்தில் இந்த சைவ ,அசைவ கான்செப்ட் காலாவதி ஆகிவிடுகிறது என்பது வேறு விஷயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக