Kalidoss Tamilmani : · இப்பவும் சொல்கிறேன், பறையிசையோ ஒப்பாரியோ எம் மக்களிசையல்ல,அது ஆதிக்கம் எம்மீது சுமத்திய அடக்குமுறையின் குறியீடு.அதை ஏதோ எம்மக்களின் பெருமித வாழ்க்கைபோலக் காட்டி நிறுவமுயல்வதென்பது மலம் அள்ளுவோர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று மோடி எழுதிய புத்தகத்துக்குச் சமமானது.பறையிசை என்பது போர்களில்,வேட்டையாடப்போகையில்,திருவிழாக்களில் பூசாரி முதற்கொண்டோருக்கு சாமி(!) வரவழைப்பதற்காய் என மனிதனுக்குள்ளிருக்கும் மிருகத்தனத்தை வெளிப்படுத்தி வெறியேற்றப் பயன்படுத்திய ஒரு வெறியிசை அவ்வளவுதான்,அதேபோல் ஆதிக்கக்கூட்டத்து வீட்டுச் சாவுகளில் அழுவதற்குக்கூட சேரிப்பெண்கள் தேவைப்பட்டார்கள் பிற்பாடு இவ்வகை ஒப்பாரிப்பெண்கள் ஜெயலலிதாவின் சிறைப்பயணங்களுக்கு பூவை கூட்டத்தால் வாடகைக்கு விடப்பட்டார்கள்.....
இன்று சிவகங்கை மாவட்டம் உட்பட தென்மாவட்டங்களின் தலித்துகள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் குறிப்பிடும்படி உயர்ந்திருக்கிறார்கள் எனில் எங்கள் முன்னோர்கள் பறையை இழிதொழிலாய் எண்ணி முழுமையாகக் கைவிட்டதுதான்.தொடர்ந்து தப்படித்த ஒருசில குடும்பங்களும் சமூகங்களால் மூர்க்கமாகப் புறக்கணிக்கப்பட்டார்கள்.ஊர் பொதுத்திருவிழாக்களில்,அதில் நடத்தப்படும் அரிச்சந்திரன் நாடகங்களில் பறையர்களின் மூர்க்கமான எதிர்ப்பால் பறையடிப்பது நிறுத்தப்பட்டு பின்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டது,ஆதிக்க சாதியினரின் சவ ஊர்வலங்களுக்கு வடமாவட்டங்களிலிருந்து பறையடிப்போர் அழைத்துவரப்பட்டாலும்கூட ஊர்வலம் சேரியை நெருங்கியதும் நிறுத்தப்படும்,சேரியைத் தாண்டும்வரை அமைதிக்காக்கும்.இன்றுவரை இதுதான் எங்கள் பகுதி நிலவரம்.ஆனால் இன்று பறையிசையும் ஒப்பாரியும் எங்கள் பெருமிதம் என்றும்,அதைக் கேட்கும்போது உணர்ச்சிப்பெருக்கெடுக்கிறதென்றும் இளைய தலைமுறையிடையே மூளைச்சலவை செய்வதென்பது தலித்துகள் அனைவரோடும் போட்டிபோட்டு வளர்ந்து விட்டாலும்கூட அவன்மீது தொடர்ச்சியாய் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து
அவனையும் நம்பவைக்கும் முயற்சி.நீ டாக்டராயிருக்கலாம் வக்கீலாய் இருக்கலாம் ஏன் கட்சித்தலைமையாய்க்கூட இருக்கலாம் ஆனால் நீ கொட்டடித்த கூட்டம்தான் என்று தொடர்ச்சியான பிம்பத்தை அவன்மீது ஒட்டுவதற்கு வசதியாய் அதேசமயம் அவன் அதுபற்றிப் பெருமிதப்படும் வகையின் அவன் சார்ந்த கூட்டத்தையே பயன்படுத்தும் சங்கிகள் உக்தி என்றே படுகிறது.
பெரியார் நேசன் : இத்த்தான் சொன்னேன்...ஊர் தெரு எப்படி சாதிய அடையாளமோ... குல தொழில் எப்படி சாதிய அடையாளமோ...அப்படி பறையும் சேரியும் சாதிய அடையாளம்னு...இழி நிலையை புனிதப்படுத்தும்போது அது நம்மில் நிலைத்துவிடும்னு... .அங்க ஆரம்பிச்ச சண்டதான் கேஸ்வரை போனது...இத்தனைக்கும் இத சொன்னதே அண்ணல்தான்... குல தொழில் ஒழிப்பு சாதி ஒழிப்பின் ஒரு அங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக