Kuttimani Thala : · குறை சொல்ல வில்லை ஆனால் நிகழ்வை சொல்லவேண்டும் அல்லவா !! நிறைய மக்கள் கேட்கிறாங்க. சரி. எம்ஜியார்க்கு கிட்னி பிரச்சனையாகி திடீரென்று மயக்கமாகி விட்டார். அப்போது இப்போது போல் பெரும் மருத்துவ வசதி கிடையாது. முண்ணனி நரம்பியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஜப்பானில் இருந்து டாக்டர் கானு வரவழைக்கப்பட்டார். அவர் மிக பிஸியான டாக்டர் இப்போது போல் அடிக்கடி விமான வசதிகளும் கிடையாது. ஆர் எம் வீரப்பன் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி யிடம் சொல்லி, சிங்கப்பூர் - இந்தியா விமானம் மூன்று மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு, டாக்டர் கானு ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வந்து, அந்த விமானம் பிடித்து சென்னை வந்து எம்ஜியாருக்கு, சிகிச்சையளிக்க, எழுந்து உட்கார்ந்தார் எம்ஜியார்.
கானு தனக்கு கான்பரன்ஸ் மற்றும்
பணிகள் இருக்கிறது உடனே கிளம்ப வேண்டும் என்றார். வீரப்பனுக்கு பயம். மீண்டும் உடல்நிலை மோசமானால் என்ன செய்வது என. கானுவோ அடம்பிடிக்கிறார்.
அப்போது சகோதரிகள் (அம்பிகா, ராதா) கானுவை கவனித்துக் கொள்ள, அவர் இங்கேயே,
தங்கி சிகிச்சை மேற்கொண்டார்.
பிழைத்த எம்ஜியார், 40 ஏக்கர் அரசு
நிலத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார் . அங்கு அவர்கள் ஒரு ஸ்டியோ
கட்டினார்கள்.காலங்கள் உருண்டோடின. ஸ்டியோக்களின் தேவை குறைய அது பிளாட்டாக
மாற்றம் பெற்றது. அந்த இடத்துக்கு
டாக்டர் கானு நகர் என்ற பெயர் சகோதரிகளால் சூட்டப்பட்டது.
இதுபோல
எண்ணற்ற புறம்போக்குகளுக்கு வாரி வழங்கிய வள்ளல் அரசு தான் எம்ஜியார்
அரசு. அருமை நண்பரை விமர்ச்சிக்க மாட்டேன் என்ற கலைஞரின் பெருந்தன்மையால்,
மறைவுக்கு பிறகு தொப்பி தலை தப்பியது
Feb 28, 2013 Shankar - tamil.filmibeat.com : அம்பிகா - ராதாவின் ஏஆர்எஸ் கார்டன் நட்சத்திர ஓட்டலாகிறது! | ென்னையின் பிரபல ஸ்டுடியோக்களில் ஒன்று ஏஆர்எஸ். அம்பிகா, ராதா, அவர்களின் அம்மா சரஸ்வதி பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டுடியோ.சென்னை வளசரவாக்கத்தில் ஓரளவு பெரிய நிலப்பரப்பில் இந்த ஸ்டுடியோ உள்ளது. தமிழின் பல முக்கிய படங்கள், குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு மிக முக்கிய இடமாகத் திகழ்ந்தது ஏஆர்எஸ்.
ஜப்பான் நரம்பியல் நிபுணர் Dr.Kanu.. |
சென்னையில் பட ஸ்டுடியோக்கள் படிப்படியாக மூடப்பட்டு வந்தபோதும், ஏவி.எம், பிரசாத் ஆகிய இரு ஸ்டுடியோக்கள் மட்டும் மூடப்படாமல் உள்ளன. இந்த லிஸ்டில் ஏஆர்எஸ் ஸ்டுடியோவையும் சொல்லலாம். 1984-ம் வருடம் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது.
ஏராளமான படங்கள் இந்த ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. ஆனால் இப்போது படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு மாறிவிட்டதால், டெலிவிஷன் தொடர்கள்தான் இந்த ஸ்டுடியோவை இயங்க வைத்துக் கொண்டிருந்தன.
எனவே ஏ.ஆர்.எஸ். கார்டனில் உள்ள படப்பிடிப்பு நிலையங்களை இடித்து விட்டு, அந்த இடத்தில் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல் கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. நடிகை ராதாவின் கணவருக்கு சொந்தமாக மும்பையில் ஏற்கனவே ஒரு நட்சத்திர ஓட்டல் இருக்கிறது. நட்சத்திர ஓட்டல் தொழிலில் அவருக்கு அனுபவம் இருப்பதால், ஏ.ஆர்.எஸ். கார்டனையும் நட்சத்திர ஓட்டலாக மாற்ற ராதா முடிவு செய்துள்ளாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக