இதற்கிடையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கரக் மாவட்டம் தெறி என்ற கிராமத்தில் இந்து மத கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வாரம் தோறும் அப்பகுதியில் வசித்துவரும் இந்துக்கள் வழிபாடு செய்வது வழக்கம்.
இந்நிலையில்,
இந்து மத கோவில் அமைந்திருந்த தெறி கிராமம் அருகே ஜமாத் உலேமா இ இஸ்லாம்
எஃப் என்ற இஸ்லாமிய மதவாத கட்சி நேற்று பேரணி ஒன்றை நடத்தியது.
இந்த
பேரணியின் போது கூடியிருந்தவர்களிடம் இந்துமத கோவிலை அழிக்க வேண்டும் என்ற
நோக்கத்தோடு வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சை சிலர் ஒலிப்பெருக்கி
மூலம் பேசினர்.
இந்த வெறுப்புணர்வு பேச்சால் உணர்ச்சிவசமடைந்த பேரணியில் கூடியிருந்தவர்கள் தெறி கிராமத்தில் உள்ள இந்து மத கோவில் இருந்த பகுதிக்கு சென்றனர்.
இந்து மத கோவில் அமைந்திருந்த பகுதிக்கு சென்ற அந்த கும்பல் கோவிலை முற்றுகையிட்டனர். மேலும், அந்த இந்து மத கோவில் கட்டிடத்தை இடித்தனர். கோவிலை தீ வைத்து கொளுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் இந்து மத கோவில் தீக்கிரையாகி, கட்டிடம் தகர்க்கப்பட்டு முழுவதும் அழிக்கப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்து மத கோவில் அழிக்கப்படுவதற்கு காரணமாக
இருந்து ஜமாத் உலேமா இ இஸ்லாம் எஃப் அரசியல் கட்சியின் பேரணி குறித்து
கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மௌளானா அதர் ரகுமான் தனது கட்சி
பேரணிக்கும் இந்து மத கோவில் தீ வைத்தும், இடித்தும் எரிக்கப்பட்டதற்கும்
எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக