கார்ப்பரேட் விவசாய பொருட்கள் |
விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பது தான் இந்த வேளாண் சட்டம் என்றால் விவசாயிகள் அதை எதிர்ப்பதில் தவறில்லை.
நாம் அவர்களுடன் இணைந்து எதிர்க்காமல் இருப்பதுதான் தவறு.
கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தால்தான் இன்று பெட்ரோல் டீசல் விலை தினம் தினம் விலை ஏறுவது போன்று வரும்காலத்தில் அரிசி பருப்பு காய்கறிகளும் தினம்தினம் கட்டுப்பாடு இன்றி விலை ஏறும்.
விலை ஏற்றலாம் என்று இந்த வேளாண் சட்டத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக அமைத்துக் கொடுத்துள்ளது இந்த பாசிஸ பாரதிய ஜனதா ஆட்சி. இது தெரிந்துதான் பஞ்சாப் காரர்களான சர்தார்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
ஆறு சுற்று பேச்சு வார்த்தை நடந்தும்
அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும்
அப்படி என்னதான் பிரச்சினை? விவசாயிகள் ஏன் இன்னும் சமாதானத்திற்கு வரவில்லை??
வேளாண் சட்டத்தை திரும்ப பெறாதவரை எங்கள் சடலங்கள் கூட வீடு திரும்பாது
என்று விவசாயிகள் உறுதியாக இருக்க
போட்ட சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவருகிறது. மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக
போராடும் விவசாய சங்கத்தை உடைக்கப் பார்க்கிறது.
இரண்டு தரப்பும் இப்படி விடாப்பிடியாக
முரண்டு பிடிக்க காரணம் என்ன?
Contract_Farm சட்டத்தை ஆதரிக்கிறவர்கள் சொல்கிற விசயம்;
கஷ்டப்பட்டு விளைய வைத்த பொருளை இனி நஷ்டத்துக்கு இடைத்தரகர்களிடம் அள்ளிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
ஏதோ ஒரு கம்பெனியுடன்
Contract Farm சட்டப்படி ஒப்பந்தம்
போட்டுக்கொண்டால்
விதை, உரம் மற்றும் விவசாய செலவுக்கான பணம் மட்டுமல்ல
விளைந்த பொருளை கம்பெனியே எடுத்துக்கொண்டு காசை கொடுத்து விடும். என்று வேளாண் சட்டம் சொல்கிறது.
கேட்பதற்கு என்னவோ
திகட்டிப்போன தேனும் பாலும்
கடைவாயில் வழியிற மாதிரித்தான்
இருக்கும் ஆனால்;
அதற்குள்ளிருக்கும் விஷம்?
ஆளை மயக்கும் விளம்பரத்துக்கு அடியில்
Conditions_apply என்ற சுருக்கு கயிறு வைத்திருக்கிறது அந்த சட்டம்.
1) விவசாயத்திற்கான பணம் கொடுப்பார்கள் என்பது உண்மை தான்.
எவ்வளவு தெரியுமா?
வெறும் பத்து சதவிகிதம். உதாரணமாக ஒரு போகம் விளைச்சலுக்கு
ஒரு இலட்ச ரூபாய் செலவாகுமென்றால்பத்தாயிரம் ரூபாய் மட்டும் தருவார்கள்.
பாக்கி 90 ஆயிரம் விவசாயி பாக்கெட்டிலிருந்து தான் போடணும்.
ஒரு தடவை விளையவில்லை என்றால்
அடுத்த தடவையும் விவசாய
செலவுக்கு பணம் கொடுப்பார்கள்
ஆனால்
அந்த பணம் அப்படியே நிலுவையாக
தொடரும்.
தொடர்ந்து பத்து நிலுவை தொகையான பணம் பாக்கி நிற்குமானால்
ஒப்பந்தம் செய்து கொண்ட நிலம் ஒப்பந்த கம்பெனிக்கு சொந்தமாகி விடும். இதுதான் சட்டத்தில் உள்ள கண்டிஷன்.
2) அடுத்து விதை. அந்த விதை எப்படிப்பட்ட விதை தெரியுமா?
ஒரு முறைக்கு மேல் மறு முறை
கருத்தரிக்காத மலட்டு விதை.
காரணம்?
எந்த விவசாயியிடமும் எந்த விதையும் தங்கி விடக்கூடாது. எப்போதும் தன்னை சார்ந்தே இருக்க வேண்டுமென்ற கார்ப்பரேட் கம்பெனிகளின் சூழ்ச்சி.
கான்ட்ராக்ட் விவசாய ஒப்பந்த சட்டப்படி கம்பெனி என்ன விதைபொருள் கொடுக்கிறதோ
அதை மட்டுந்தான் விளைவிக்க முடியும்.
ஐம்பது அரளிக்கொட்டையும் குண்டுமணியும்
விதைத்து விடு என்றால்
விதைத்துத்தான் ஆக வேண்டும்
Because you contract with company
3) *விதைக்கு அடுத்து உரம்*
நம் வயலில் என்ன விதைக்க வேண்டும் என்பதை மட்டுமல்ல
எந்த வகையான உரம் தெளிக்க வேண்டும் என்பதையும் ஒப்பந்தம்
செய்து கொண்ட கம்பெனியே முடிவெடுக்கிறது
அந்த உரம் எப்படிப்பட்டதாக இருக்கும்
என்பது தான் அதிர்ச்சியும் ஆபத்துமாக இருக்கிறது.
குறிப்பாக *காலங்காலமாக நெல் பயிருடும் மண்ணில் அந்த மண்ணுக்கு எதிர்மறையான உரங்களை உபயோகப்படுத்தச் சொல்லி கட்டாயப் படுத்துவதால் நாளடைவில் மண் மலட்டுத்தன்மை அடைந்து விடும்.*
*காசும், விதையும், உரமும், கொடுத்து*
கான்ட்ராக்ட் போடும் கம்பெனிக்கு
மகசூல் முக்கியமல்ல;
*மண்ணை மலட்டுத் தன்மையாக்கி அதன்மூலம் மகசூலை குறைத்து நாளடைவில் விவசாயியை கடனாளியாக்குவது தான் அவர்களது நோக்கம்*.
4) இடைத்தரகர் இல்லாமல்
ஒப்பந்தம் போட்ட கம்பெனியே
விளைபொருளை விலை கொடுத்து
வாங்கிக்கொள்ளும்.
இதுவும் உண்மைதான்
*Contract Farm act படி*
*வெளியில் தெரியாத Conditions apply படி*
ஒப்பந்த கம்பெனி விவசாயி இடமிருந்து எடுத்துச்செல்லும் பொருளுக்கு
தரமும் விலையும் நிர்ணயிக்கும்
கால அவகாசம் 90 நாட்கள்.
உதாரணமாக ஒரு விவசாயிடமிருந்து
50 மூட்டை நெல்லை எடுத்துக்கொண்டு ஒரு கார்பரேட் கம்பெனி
போகிறதென்றால் 90 நாட்கள் கழித்து;
*அந்த பொருள் காய்ந்து போனது Quantity யும் கருக்ககாயாக உள்ளது Quality யும் சரியில்லை குறைந்து விட்டது என்று கூறி 50 நெல் மூட்டைக்கு பதிலாக 25 மூட்டை நெல்லுக்கு மட்டும் காசை கொடுத்தால்;*
*எங்காவது கோயில் குளத்துல போயி மண்ணை வாரி தூத்தலாமே தவிர கேள்வி கேட்க முடியாது அந்த விவசாயி*
*Because you contract with company*
ஏதோ புதிய வேளான் சட்டத்தால்
கார்பரேட் கம்பெனிகள் அருவா கம்போடு வந்து நாளையே விவசாயிகளை அடித்து
அவர்களின் நிலங்களை பறித்துக்கொள்ளும் என்று அர்த்தமல்ல!
*அந்த விவசாயியே வேண்டாம்டா சாமி அந்த நிலம் எனக்குன்னு.... சொல்லி கார்பரேட் கம்பெனிக்காரன் கிட்டேயே நிலத்தை கொடுத்துட்டு கும்பிட்டு விழுந்துட்டுப் போற நிலை வரும்.*
இதை உணர்ந்த *உலகெங்கும் பரவிக் கிடக்கும் பஞ்சாபிகள்*
அந்தந்த நாடுகளில் இந்த contract farm சட்டம் மூலம்
*கார்பரேட் கம்பெனிகள் எப்படியெல்லாம் நிலங்களை பறித்துக்கொண்டு விவசாயிகளை நடுத்தெருவில் விட்டது என்பதை பஞ்சாப் விவசாயிகளுக்கு சொல்ல...*
விழிப்படைந்த சர்தார்கள்.
*இழப்பதற்கு இனி எதுவுமில்லையென்றுவீதிக்கு வந்து விட்டார்கள்!*
*இந்த விஷயத்தை விலாவாரியாக எடுத்துச்சொல்லி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தமிழக திருட்டு ஊடகங்கள்*
*ஒரு நாளைக்கு ரஜினிகாந்த் எத்தனை தடவை தலை வாருனானு, எத்தனை தடவை அவரு பாத்ரூம் போனாருன்னு பிரேக்கிங் நியூஸ் போட்டுக்கிட்டு இருக்கானுக.*
வா.ப
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக