puthiyamugam.com :ஆபத்தான தொற்று நோய்கள் பரவும் சமயத்தில் எல்லாம் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் என்ற பரிந்துரைகளை கேட்க முடிந்தது. சிக்கன்குனியா, கோவிட் அல்லது கொரோனா தொற்று நோய்கள் பரவியபோது இதைக் கேட்க முடிந்தது. கொரோனா தொற்றுக்கு கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தபோது ஆங்கில மருத்துவ மேதைகள் கேலி செய்தார்கள். அது பயனளிக்காது என்றுகூட சிலர் சொன்னார்கள். ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கபசுர குடிநீரை நோய் எதிர்ப்பு சக்திக்காக அரசாங்கமே மக்களு வழங்கியது. அதுதான் தமிழகத்தில் நோய் பாதிப்பிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, கபசுரக்குடிநீரில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பாக லொயோலா கல்லூரியின் ஆய்வாளர் டாக்டர் எஸ்.வின்சென்ட்டை ஆராய்ச்சி மேற்பார்வையாளராகவும் டாக்டர் மனோஜ் தன்ராஜை குழு உறுப்பினராகவும், எத்தியோப்பியா நாட்டின் ஆராய்ச்சி விஞ்ஞானி முத்துப்பாண்டியன் சரவணன், தென்கொரியாவைச் சேர்ந்த செஜோங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்வராஜ் ஆரோக்கியராஜ் ஆகியோரையும் உள்ளடக்கிய குழு கபசுரக்குடிநீரின் நோய் எதிர்ப்பு சக்தியை ஆராய்ச்சி செய்து அதன் சிறப்பை உறுதி செய்தது.
தங்களுடைய ஆராய்ச்சி முடிவு குறித்து, டாக்டர் வின்ஸென்ட் அளித்த பேட்டியில்…
கபசுரக்குடிநீரில் 145 மூலப்பொருட்கள் இருக்கின்றன. அவை நோய் எதிர்ப்பில் மிகவும் நல்ல பயனை அளிக்கின்றன. கொரோனா வைரஸை தடுத்து நிறுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு என்றும், நோய்க்கிருமிகளை உள்வாங்கும் நமது உடலில் உள்ள ரிசப்டார்களை பாதுகாப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் கண்டறிந்தோம்.
நாங்கள் கண்டறிந்த 145 மூலப்பொருட்களில் குறிப்பாக 15 மூலப்பொருட்கள் இந்த கொரோனா வைரஸை தடுப்பதில் சக்திவாய்ந்த பங்களிப்பது தெரியவந்தது. அதனால்தான் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை உலக அளவில் 71 சதவீதமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் அது 96 சதவீதமாக இருப்பதற்கு முக்கிய காரணம் கபசுரக்குடிநீர் ஆகும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக