இந்நிலையில், உடைமைகளையும் இசைக்கருவிகளையும் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், ஸ்டூடியோவுக்குள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் இளையராஜா. நீதிமன்ற வலியுறுத்துதலின் பெயரில், சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிக்குள் உடைமைகளை எடுத்துவிட்டு வரவும், தியானம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, இன்று இளையராஜா ஸ்டூடியோவுக்கு வர இருந்தார். உடைமைகளை எடுத்துச் செல்ல இரண்டு லாரிகளும் ஸ்டூடியோவுக்கு வந்தது. அதோடு, ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் அங்கு கூடிவிட்டனர்.
இளையராஜா இன்று வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரசாத் ஸ்டூடியோவிற்கு அவர் வரவில்லை. இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால் இன்று அவர் வரவில்லை. முன்னதாக, இளையராஜாவின் ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, பத்திரிகையாளர்கள் கூடிவிட்ட செய்தியும் தெரிந்திருக்கிறது. இதனால், அதிர்ச்சியடைந்த இளையராஜா இன்று வருவதை தவிர்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
-ஆதினி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக