ஞாயிறு, 15 மார்ச், 2020

மதுரை ஸௌராஷ்டிரா மக்களிடையே பாஜக செல்வாக்கு ஓங்குகிறதா?


Elangovan Muthiah : மதுரை வாழ் சௌராஷ்ட்ரா சமூக மக்கள் இன்றைய குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் இணையும் சௌராஷ்ட்ரா பகுதியிலிருந்து அவர்களது நெசவுத் தொழிலுக்காக நாயக்க மன்னர்கள் காலத்தில் மதுரைக்கும், தஞ்சைக்கும் அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்பட்டவர்கள். ஒப்பீட்டளவில் மதுரையில் இவர்களது எண்ணிக்கை மிக அதிகம்.
மதுரையில் ஒரு சௌராஷ்ட்ரா இன மனிதரைப் பார்த்தவுடன் இனம் கண்டுவிட முடியும். காரணம் அவர்களது நிறம், உடைத்தேர்வுகள் மற்றும் மொழி. மதுரையோடு இரண்டறக் கலந்த வாழ்வை வாழ்பவர்கள் என்றாலும் தங்களுக்கெனத் தனித்த ஒரு பண்பாட்டைத் தொடர்ச்சியாகப் பேணி வருபவர்கள் இவர்கள்.
அந்த சௌராஷ்ட்ர நில அடையாளத்தின் பெருமித அடிப்படையில்தான் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலேயே அவரை மதுரையில் உள்ள, சௌராஷ்டிர மக்களால் நடத்தப்படும் கே.எல்.என் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். அப்போது ஆரம்பித்த மோடி பைத்தியம் இப்போது வரை இவர்களில் பெரும்பாலானோரைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. இவர்களில் பலர் இப்போது தீவிர மோடி ஆதரவாளர்கள், பாஜக விசுவாசிகளாக மாறிப் போயிருக்கிறார்கள். தீவிர இந்துத்துவம், இஸ்லாமிய வெறுப்பு பேசுபவர்களாகவும்...

சௌராஷ்ட்ரா இன மக்களில் கலப்புத் திருமணம் வெகு அரிதாக இருந்த காலம் போய் இப்போது அந்த இனப் பெண்கள் பரவலாக வேறு தமிழ்ச்சாதி இளைஞர்களைத் திருமணம் செய்வது அதிகரித்திருக்கிறது. இது அந்த இன மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தவும் செய்திருக்கிறது. இப்போது அவர்களது சங்கக் கூட்டங்களில், அவர்களது இனப் பெண்கள் அடுத்த சாதி இளைஞர்களைத் திருமணம் செய்வதைத் தடுக்க வேண்டும் என்பது முக்கியப் பேசுபொருளாக இருக்கிறது. RSS, இந்துத்துவாவின் அடிப்படைப் பேசுபொருளான 'இனத்தூய்மை' யின் நீட்சிதான் இது. இதற்கு உள்ளுக்குள்ளேயே எதிர்ப்பு இல்லாமலும் இல்லை. ஆனால் அது மிகக் குறைந்த முணுமுணுப்பாகவே இருக்கிறது. ஒரு வகையில் தீவிரக் காவி மயமாகிவரும் இடைநிலைச்சாதிகளில் முதலிடத்தை சௌராஷ்ட்ரா சமூகத்துக்கு வழங்கலாம். மற்ற இடைநிலைச் சாதிகளைப்போல இவர்களுக்கு 'ஆண்ட பெருமை' பேசும் வரலாறு இல்லை என்றாலும் இனத்தூய்மை காக்கப்பட வேண்டும் என்கிற தீவிர மனநிலையை வந்தடைந்திருக்கிறார்கள். இதில் பாஜக, RSS கொள்கைகளின் தாக்கம் மிக அதிகம்.
நான், நீண்ட நாட்களாகவே தமிழகத்தில் கன்னியாகுமரிக்கு அடுத்து பாஜக தனித்து வெற்றி பெறும் வாய்ப்புள்ள இடம் மதுரை என்பதைச் சொல்லியபடியே இருக்கிறேன். அதற்கான ஒரே காரணம் மதுரையில் தேர்தல்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு எண்ணிக்கை பலம் வாய்ந்த சௌரஷ்ட்ரா மக்களின் சமீப கால பாஜக ஆதரவு மனப்போக்குதான்.
ஒரு எளிய உதாரணம் ஒன்று சொல்கிறேன். ஊரே கழுவி ஊற்றிக்கொண்டிருக்கும் புளுகு மூட்டைகளில் ஒன்றான மாரிதாஸை அழைத்து வந்து தங்களது சமுதாய சங்கக் கூட்டத்தில் பேச வைத்திருக்கிறார்கள் சௌராஷ்ட்ரா மக்கள். ஒரு நாள் கருத்தரங்கம், நல்ல கூட்டம் என்று சொல்லப்படுகிறது. மாரிதாஸ் என்ன பேசியிருக்கக்கூடும், அதை நம்புபவர்கள் எப்படி இருக்கக்கூடும் என யூகிக்க முடியாதா என்ன?
பாஜக அட்டகாசமாக இதைக் கையாள்கிறது. மற்ற கட்சிகள் இவர்களுக்கான, இவர்களது திடீர், தீவிர பாஜக ஆதரவு மனநிலையின் அரசியல் முக்கியத்துவத்தை இன்னும் உணராமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருந்தவர்கள் இவர்கள். கொல்லப்பட்ட கவுன்சிலர் லீலாவதி சௌராஷ்ட்ர சமூகத்தைச் சேர்ந்தவர்தான். கம்யூனிஸ்ட்டுகள் தங்களது நிரந்தர வாக்கு வங்கிகளுள் ஒன்று, தங்களது கொள்கைகளுக்கு நேரெதிரான கட்சி ஒன்றோடு ஒத்தோடுகிறது என்பதைப் புரிந்து களப்பணி ஏதும் செய்கிறார்களா என்று பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படி எதுவும் இல்லை.
இப்படியும் ஒரு ட்ராக் சத்தம்போடாமல் ரொம்ப நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மாமதுரையில்.
உண்மையில், அடுத்த தேர்தலில், "மதுரையில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி" என்று செய்தி வந்தால் 'கெதக்' என்றெல்லாம் இருக்காது...

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

*****த்தா நீ யாரா எங்களுக்கு ஆண்ட பெருமை இல்லனு சொல்ல நாயே

Unknown சொன்னது…

Gujarat & maharashtra ரெண்டும் சேர்ந்தது தான் எங்க சௌராஷ்டிரா தேசம்
Mohamed kajini 17 முறை யுத்தம் செஞ்சது எங்க கூடத்தான்