செவ்வாய், 17 மார்ச், 2020

கலைஞர், பேராசிரியர் மறைவுக்கு பின் திமுக என்ற திராவிட இயக்கம்

Muralidharan Pb : பிரதமர் இந்திரா, முதல்வர் எம்ஜிஆர், ராஜீவ்காந்தி,
முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மறைந்த போது, ராஜீவ்காந்தியை தவிர மற்றவர்கள் அரசு பதவியில் இருந்தபோது மறைந்தனர்.
குறிப்பாக இந்திராகாந்தி, எம்ஜிஆர், ராஜீவ்காந்தி மறைந்தபோது அதிகமாக பொதுச்சேதங்கள் ஏற்பட்டது.
மிகவும் குறிப்பாக எம்ஜிஆர் இறந்தும் அவரது இறப்புக்கு காரணமே கலைஞர் கருணாநிதி தான் என அவரது சிலையை உடைத்து, கடைகளை சூரை ஆடி, திமுகவினரின் பொருட்களை நாசம் செய்தது அன்றைய அதிமுகவினரும் உள்ளிட்ட சில சமூக விரோத கும்பலும்.
அதேபோல் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட ஒரு வார காலம் வரை தமிழகத்தில் திமுகவினர் வீடுகள், வணிக வளாகங்கள், கொடிகள், சொத்துக்கள், வண்டிகள் என எல்லாமே திட்டமிட்டு நாசம் செய்தனர். தமிழர்கள் டில்லியில், வடமாநிலங்களில் தாக்கப்பட்டனர்.
இந்திராகாந்தி மரணத்தின் போது சீக்கியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர்.
ஆனால் ஜெயலலிதா இறந்தபோது ஓரளவு பக்குவப்பட்டனர் அதிமுகவினர்.அன்றைய தினம் பயணத்தில் இருந்த நான் எங்குமே கண்ணால் கூட கற்களை வீசுவதையோ, கலாட்டகளையோ காணவில்லை. அதையும் குறிப்பிடவேண்டும். கண்ணியமாக நடந்துக் கொண்டனர் அதிமுகவினர்.

ஆனால் அவர் இறந்ததாக அறிவித்த சில மணிநேரத்தில் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எந்த தயக்கமுமின்றி (அழாமல்) பதவி ஏற்றக்கொண்டனர். யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இறக்கும் போது எந்த ஒரு ஆட்சியிலோ பதவியிலோ இல்லாத தலைவர்கள் கலைஞர், பேராசிரியர், வாஜ்பாய் போன்றோர்.
இவர்கள் மறைந்தபோது எங்கும் பொதுமக்கள் பாதிப்படையவில்லை.
வாஜ்பாயை எரித்தவுடன் அவரை மறந்துவிட்டது பாஜக, மற்றும் ஆர்எஸ்எஸ்.
ஆனால் கலைஞர், பேராசிரியர் இறப்புக்கு பிறகு திமுக என்ற திராவிட இயக்கம் அவர்கள் செய்த சாதனைகளை சம்பந்தப்பட்ட துறையினரை வைத்து புகழஞ்சலி செலுத்துகின்றது.
அந்த அளவிற்கு அவர்கள் மக்கள் பணி, இயக்கப்பணி, இலக்கியப்பணி, கலைப்பணியாற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் அவர்களை பற்றி தற்கால சந்ததியினரும் அறிந்திட ஒரு வாய்ப்பு.
இதுதான் திராவிட இயக்கம், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் யுத்தியாக நான் காண்கிறேன்.
மற்றவர்கள் எல்லாமே அரசியல் தலைவர்களாக மறைந்தனர்.
கலைஞரும் பேராசியிரும் வெறும் அரசியல் ஆளுமைகளாக மட்டுமில்லாது, திராவிட வரலாறாக அடுத்த இடத்திற்கு நகர்கின்றனர்.
அதைத்தான் திருவள்ளுவர்,
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
என்கிறார்.
விளக்கம்:
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
17/03/202

கருத்துகள் இல்லை: