திங்கள், 16 மார்ச், 2020

உலகளவில் 6,515 பேர் கொரோனாவால் இதுவரை உயிரிழப்பு

.sathiyam.tv  : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய் 140-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
சீனாவில் இதுவரை உயிரிழப்பு 3 ஆயிரத்து 213  ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு பிறகு அதிக உயிரிழப்புகளை ஈரான், இத்தாலி நாடுகள் சந்தித்துள்ளது. இத்தாலியில் ஆயிரத்து 809 பேரும், ஈரானில் 724 பேரும், ஸ்பெயினில் 292 பேரும் உரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனாவால் சுமார் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: