சனி, 21 மார்ச், 2020

துறைவாரியாக பேக்கேஜ் அறிவிக்க வேண்டும்.. ஈ.எம்.ஐ.களை தள்ளிப்போட வேண்டும்: சோனியா காந்தி

Veerakumar /tamil.oneindia.com : டெல்லி: கொரோனா வைரஸ் பரவலைக் கண்டு பீதியடைய வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களை வலியுறுத்தினார்,
மேலும் இந்த வேதனையான நெருக்கடிக்கு நாடு தலைவணங்காது என்று அவர் சூளுரைத்தார். கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை அவர் பரிந்துரைத்தார், மேலும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க அரசால், ஒரு விரிவான, துறை வாரியான நிவாரணப் பேக்கேஜை அறிவிக்க வேண்டும் என்றார்.
தனது அறிக்கையில், சோனியா காந்தி காந்தி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியையும் அரசையுயம், நாடு முழுவதும் வைரஸ் சோதனை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை பிரத்யேக போர்ட்டல் மூலம் வெளிப்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.
 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கும் வலியுறுத்தினார்


"அசாதாரண நேரங்கள் அசாதாரண நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றன. தேவையான வரிச்சலுகைகள், வட்டி குறைப்பு மற்றும் கடன்களை ஒத்திவைத்தல் உள்ளிட்ட ஒரு விரிவான, துறை வாரியான நிவாரணப் பேக்கேஜை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். சம்பளம் பெறும் வர்க்கத்தை அரசும், ரிசர்வ் வங்கியும் கருத்தில் கொள்ள வேண்டும்

ஈ.எம்.ஐ.க்களை ஒத்திவைத்தல் போன்றவை அவர்களுக்கு பலன் தரும் " என்று சோனியா குறிப்பிட்டுள்ளார். Primis Player Placeholder "வழக்கமான ஊழியர்களுக்கு கூட, பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய பிடிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளன.
எனவே, இந்த பிரிவினருக்கு நேரடி பண நிதி உதவி உட்பட பரந்த அடிப்படையிலான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு முன்வைக்க வேண்டும்," என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து வணிகங்களும், குறிப்பாக, நடுத்தர வணிகங்கள் பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சோனியா காந்தி தெரிவித்தா<

கருத்துகள் இல்லை: