திங்கள், 16 டிசம்பர், 2019

கைதாகிய பலர் பற்றிய தகவல் இல்லை . இறந்தவர்கள் தொகையை அறிவிக்க மறுக்கிறது அரசு!

Devi Somasundaram : ஜாமியா பல்கலைக் கழகத்தில் எந்த போராட்ட அறிவிப்பும்
இல்லாத நிலையில் போலிஸ் அத்து மீறி பல்கலை கழக வளாகத்திற்குள்
நுழைந்து மாணவர்களை தாக்க தொடங்கியது .
மாணவர்கள் என்ன நடக்கின்றது என்று நிதானிக்க விடாமல் அடித்து பாத் ரூம்கள் வரை தேடி மண்டை உடைய அடித்தது .
லைப்ரரிகளில் நுழைந்து அங்கிருந்த faculty களை கூட தாக்கியது ..
இது நட்ந்து கொண்டுருக்கும் போதே வீதிகளில் பஸ்கள் கொளுத்தப் பட்டதாக செய்தி சானல்கள் செய்தி வெளியிட்டது .
ஜாமியா மாணவிகள் போலிஸ் வன்முறைக்கு எதிராக திரண்டனர்..கையில் அம்பேத்கரையும் காந்தியையும் மட்டுமே ஏந்தி அமைதியாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்
அவர்களையும் அடித்து 100 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது போலிஸ் . ஜே என் யூ மற்றும் அனைத்து பல்கலையும் போராட்டத்தில் இறங்கின.
போராட்டம் வலு பெறுவதை தவிர்க்க மெட்ரோவை மூடியது போலிஸ்...வாகனத்தில் பயணித்த் கல்லூரி மாணவர்களை ஐடி செக் செய்து வீட்டுக்கு திருப்பிபோக சொன்னது
நெட் ஒர்க் கட் செய்யப் பட்டது
எதிர்ப்பு எல்லா இடத்திலும் பரவ ஆரம்பித்ததும் கைது செய்த மாணவர்களை விடுவித்ததாக அறிவித்த்தது அரசு..
ஆனால் கைது செய்யப் பட்ட பலரை பற்றி தகவல் இல்லை ..தன் சகோதரன் எங்கிருக்கின்றான் என்று தெரியவில்லை என்று ஜாமியா வில் படிக்கும் தோழி ஒருவர் தெரிவித்தார் .
தற்பொழுது வரை போலிஸ் மாதுரா ரோட் பக்கம் போகும் அனைவரையும் விசாரிக்கின்றது .. கல்லூரி மாணவரை சக வயதினரை வீட்டுக்கு அனுப்புகின்றது .
இறந்தது எத்தனை பேர் என்று அதிகாரப் பூர்வ தகவல் சொல்ல மறுக்கின்றது அரசு .

கருத்துகள் இல்லை: