புதன், 18 டிசம்பர், 2019

கலைஞர் .. கட்டுமரம் கட்டிவைத்த கோட்டை.... டான் அசோக்

Don Ashok -Ashok.R : கொஞ்சம் படிக்கணும். கொஞ்சம் கஷ்டப்பட்டாதான்
தெரியும். தமிழ்நாட்டு வளர்ச்சித் திட்டங்களில், உட்கட்டமைப்புகளில், கல்வி, சுகாதார மேம்பாடுகளில், கம்ப்யூட்டர் துறையில் என அத்தனையிலும் கலைஞரின் பங்கு 95% மேல். ஆனாலும் ஒருமுறை கூட கலைஞருக்கு தொடர்ந்து இருமுறை ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதும்போக திமுகவை விட அதிமுகதான் அதிக ஆண்டு ஆண்டிருக்கிறது. மக்கள் ஏன் இப்படி தீர்ப்பளித்தார்கள்? எதனால் இது நடந்தது என பலமுறை யோசித்திருக்கிறேன். நிற்க.
கலைஞர் திருவாரூரில் இருந்து நேரடியாக சென்னை வந்தவர் அல்ல. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மிக அதிக சம்பளத்தில் வசனகர்த்தாகாவ பணியாற்றிவர். மந்திரிகுமாரி உள்ளிட்ட அவரது சூப்பர் ஹிட் படங்களில் சிலவற்றை முடித்துவிட்டு, சினிமா உலகம் சென்னைக்கு மாறியபோது அவரும் இடம்பெயர்ந்தார். பின்னர் பராசக்தி எல்லாம் முடித்து சூப்பர்ஹிட் திரைக்கதை/வசன எழுத்தாளர் ஆனபின் கார், கோபாலபுரம் வீடு என பலவற்றை வாங்கினார். இதெல்லாம் பலரது பேட்டிகளில், வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட உண்மை. ஆனால் நம் ஊரில், "திருவாரூரில் திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தார்," என ஒரு பார்ப்பான் கிளப்பிவிட்டால், நம் சூத்திரப்பயல் எல்லாம் அதை அப்படியே போகுமிடமெல்லாம் வாந்தி எடுப்பான். இன்றும் எடுக்கிறான்.
ஆனால் ஜெயலலிதாவைப் பாருங்கள். மகராசி!! ஒன்றுமே செய்யவில்லை என்றாலும், வாயிலேயே செருப்பால் அடித்தாலும் ஏபிள் அட்மினிஸ்ட்ரேட்டர் என்பான். வாய்தா மேல் வாய்தா வாங்கி ஓடி ஒளிந்த தொடை நடுங்கி என்றாலும் அயன் லேடி என்பான். கரன் தப்பாரைப் பார்த்து தெறித்து ஓடினாலும், "எப்படி தெறிக்க விட்டாங்க பாத்தியா?" என்பான்.
அதேபோலத்தான் இந்த குயின் சீரீஸிலும். பத்தாவதில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்ததாக காண்பிக்கிறார்கள். எவன் பார்த்தான்? என்ன ஆதாரம்? சும்மா போகிற போக்கில் அடித்துவிட்டால் எவன் கேட்கப் போகிறான்? ஆங்கிலம் பேசுவார். வெள்ளையாக இருந்தார். பார்ப்பாத்தி. வேறென்ன வேண்டும்? சூத்திரப் பயல்களில் எவன் எதிர்த்துக் கேள்வி கேட்கப் போகிறான்? ஒருத்தனும் கேட்க மாட்டான். எனவே அடித்துவிடு!!!

இதுதான் காரணம். இன்று ஸ்டாலினுக்கும் இதுதான் நடக்கிறது. இந்த மாநிலத்தை எம்.ஜி.ஆரும், ஜெவும் அதிக ஆண்டுகள் ஆண்டதற்கு. வேற ஒரு மண்ணாங்கட்டியும் காரணம் இல்லை. திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் நாலு கால் டேபிளுக்கு அடியில், சசிகலாவின் காலுட்டடியில் ஊர்ந்த எட்டுக்கால் பூச்சி எடப்பாடியை கூட ஏசுநாதர் ஆக்குவார்கள். முற்றும்.
-டான் அசோக்,
டிசம்பர் 18

கருத்துகள் இல்லை: