வியாழன், 19 டிசம்பர், 2019

பேராசிரியர் அன்பழகன் அகவை 98 ... நேரில் வாழ்த்து தெரிவிப்பதை திமுகவினர் தவிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தினகரன் : சென்னை: திமுக பொதுச் செயலாளர் பேராசிரியரின் 98வது
பிறந்தநாளை ( December 19, 1922 )  முன்னிட்டு ேநரில் வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் , உடல் நலிவுற்று இல்லத்தில் ஓய்வு பெற்று வருவதையொட்டியும், அவரது உடல்நலனை கருத்தில் கொண்டும், அவரது 98வது பிறந்தநாளினை யொட்டி திமுகவினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பதை, முழுமையாகத் தவிர்த்திட அன்புடன் வேண்டுகிறேன்.

Muralidharan Pb : கலைஞரின் உற்ற தோழர் பேராசிரியர் என்றால் மிகையல்ல.
அவர்களது நட்பிற்கு எடுத்துக்காட்டு ஒரு நிகழ்வு.
1960களில் சென்னை புரசைவாக்கத்தில் ஒரு பொதுக்கூட்டம், அதில் கலந்து கொள்ள கலைஞரும், பேராசிரியரும் சென்றார்கள். ஒரு பெண், தனது குழந்தைக்கு பெயரிட பேராசிரியரிடம் கொடுக்கிறார். உடனடியாக பேராசிரியர், அக்குழந்தைக்கு 'கருணாநிதி' என்று பெயரிட, அருகில் இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அது பெண் குழந்தை. நிலைமையை புரிந்துக் கொண்ட பேராசிரியர், கருணாநிதி என்பது ஆண்களுக்கும் பெயரிடலாம், பெண்களுக்கும் பெயரிடலாம் என்று குறிப்பிட்டார்.
திராவிட இயக்கத்தலைவர் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் புகழ்மிக்கவர். அவரது மனைவியின் பெயர் கருணாநிதி என்று கூறுகிறார். அதேபோல், கருணை நிதி என்ற பெயர், அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் பெயர், அருட் கருவூலம், அருட்ச்செல்வம். என்று சில விவரங்களை தருகிறார்.


இந்த பெயர் எம்மததுக்கும் பொருந்தும். கருணாநிதி எனவே மாதங்களுக்கு அப்பாற்பட்டது அவரது பெயர் என்று பெருமை கொள்கிறார்.
பேராசிரியர் ஆச்சே!
கலைஞர் பேச வரும் நிலையில் இன்னொரு பெண் வந்து தனது குழந்தைக்கு பெயரிடவேண்டும் என்று கலைஞரிடம் குழந்தையை கொடுக்கிறார்கள். அவர் அக்குழந்தை பெண் என்று உறுதிப்படுத்திக்கொண்டு, அன்பழகி என்று பெயரிட்டு, தனது செல்ல கோவத்தையும், பேராசிரியர் மீது தனக்கு இருந்த நட்பையும் விட்டுக்கொடுக்காமல் பேசியது நட்புக்கு இலக்கணமாக அமைந்தது.
வாழும் திராவிட இயக்கத்தின் மிக மூத்த தலைவர்

கருத்துகள் இல்லை: