வெள்ளி, 13 டிசம்பர், 2019

ரேப் இன் இந்தியா .. மன்னிப்பு கேட்க முடியாது - ராகுல் காந்தி திட்டவட்டம்


 தினமணி : ரேப் இன் இந்தியா” எனக்கூறியது தொடர்பாக மன்னிப்பு கேட்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 புதுடெல்லி,; ஜார்க்கண்ட் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி, என்று எங்கு சென்றாலும் மேக் இன் இந்தியா குறித்து பேசி வரும் நிலையில், பாலியல் வன்முறைகள் அரங்கேறி, ரேப் இன் இந்தியாவாக தற்போது நாடு உள்ளதாகவும் விமர்சித்தார். இந்த கருத்துக்கு, ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்கக் கோரி மக்களவையில் பா.ஜ.க. எம்.​பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில், பதிலளிக்க ராகுல் காந்திக்கு சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி, “ நான் மன்னிப்பு கேட்க போவதில்லை, நான் என்ன கூறினேன் என்பதை தற்போது தெளிவுபடுத்துகிறேன்.  பிரதமர் மோடி மேக் இன் இந்தியா பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். எனவே, ஒருவர் செய்தித்தாளை திறந்து பார்க்கும் போது, அது பற்றிய செய்தியை தான் பார்க்கப் போகிறோம் என்று ஒருவர் நம்பிக்கையில் இருப்பார். ஆனால், நாம் செய்தித் தாளை திறக்கும் போது நான் என்ன செய்தியை பார்க்கிறோம். பாலியல் வன்கொடுமை தொடர்பான பல செய்திகளை நாம் பார்க்கிறோம்” என்றார்

கருத்துகள் இல்லை: