புதன், 11 டிசம்பர், 2019

சரவணன் அண்ணாதுரை : ஈழத்தமிழர்களும் நேபாளி இந்துக்களும் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் பாஜக குடியுரிமை வழங்க மறுகிறது


நாம் இதுவரை இந்திய ஜனநாயக நாடு மத சார்பற்ற நாடு  எந்த மதத்திற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம் . நாம் ஒரு மாடர்ன் ஸ்டேட் . உலகத்தில் இருக்கிற பெரிய ஜனநாயக நாடு .
இப்படி எல்லாம் பெருமிதப்பட்டு கொண்டு இருந்தோம் . அந்த பெருமிதத்துக்கு எல்லாம் ஒரு சம்மட்டி அடி கொடுப்பது போல இந்த குடியுரிமை சட்டம் வந்திருக்கிறது.
முக்கியமாக இதில் பார்க்கவேண்டிய விஷயம் என்னென்றால் இது அரசியல்  சட்ட திருத்தத்திற்கு எதிரானது.
அண்டை நாடுகளுக்கு என்று சொன்னார்கள் ஆனால் நேபாளை விட்டுவிட்டார்கள் . பர்மாவை விட்டுவிட்டார்கள் ஸ்ரீ லங்காவை விட்டுவிட்டார்கள் ஏன்?
நேபாளில் மாதேசி இந்துக்கள் ..இலங்கையில் இருக்கின்ற இந்து தமிழர்கள் போல அங்கே மாதேசி இந்துக்கள் இருக்கிறார்கள் .
மாதேசி இந்துக்களையும் ஈழத்தமிழர்களையும் ஏன் கை விட்டார்கள் என்றால் இவர்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் .
பாஜகவுக்கு தாழ்த்தப்பட்ட இந்துக்கள் மீது எந்தவிதமான அக்கறையும் கிடையாது.
அவர்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் கவலை இல்லை .
இவர்கள் மேல் ஏன் கவனம் திரும்பவில்லை என்றால் இதுதான் ஒரே காரணம்...
வேறு எந்த காரணமும் கிடையாது ..
இஸ்லாமியர்களை ஏன் தள்ளிவைக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களிடம் சரியான பதில் இல்லை .. ஏனென்றால்
இஸ்லாமியர்கள் மீதான மத துவேஷம் ..

இந்திய மக்களை  மதத்தின் அடிபடையில் பிரிக்க வேண்டும் என்பதில் இன்று  சட்டபூர்வமாக   மக்களவையில்  வெற்றி பெற்று இருக்கிறார்கள் .
நேற்று அமித் ஷா ஒரு பச்சை புழுகை  புழுகி இருக்கிறார் .
காங்கிரஸ் இரண்டு தேச கோட்பாட்டை முன் மொழிந்தது என்கிறார் .
இரண்டு தேசம் என்று முதலில் முன் மொழிந்தது  யார் ?
.. வீர்சவர்கார் .. இன்று பாஜகவினர் தலையில் தூக்கி வைத்து கொண்ட்டாடுகிறார்களே .. அதே வீர் சவர்கார்தான்.
1935  இல் இந்து மகாசபை கூட்டத்தில் வைத்து   இரண்டு நாடுகள் .. இந்து நாடு ..முஸ்லிம் நாடு என்று கூறினார்
ஆனால் நமது அரசியல் அமைப்பை சமைத்த  பெரும் தலைவர்கள் . அதில பாஜக யாருக்கும் சம்பந்தமே கிடையாது
அந்த பெரும் தலைவர்கள் இந்தியா இந்து தேசம் கிடையாது . நீங்கள் மதத்தின் அடிப்படையில் வேறு படுத்தி பார்க்க முடியாது என்று வடிவமைத்தார்கள்.
இன்று நீங்கள் முஸ்லிமாக இருந்தால் இந்திய குடியுரிமை கிடையாது . என்று மதத்தின் அடிப்படையில் பொருத்தி பார்க்கிறது பாஜக .
இதை போல ஒரு மோசமான ஒரு விடயம் ....
இந்தியாவை பிளவு படுத்தக்கூடிய ஒரு விடயம் இதுவரையில்  இந்தியாவில் நடந்தது இல்லை ..
நாடாளுமன்றத்தில்  தயாநிதி மாறன் பேசினாரே அமித் ஷா உங்களுக்கு என்ன தெரியும் ?
, நீங்கள் ஒட்டு மொத்த இந்தியவுக்கும்  ஹோம் மினிஸ்டர் . வெறும் வட இந்தியவின் ஹோம் மினிஸ்டர் மாதிரி நடந்து கொண்டு இருக்கிறீர்கள் .
இதே பிரதமர்தானே உலகம் சுற்ற போயி பேசினாரே .. யாதும் ஊரே யாவரும் கேளீர் ..
இன்னைக்கு வந்து முஸ்லிம் கிடையாதுன்னாங்க   நாளைக்கு கிறிஸ்தவர்கள் கிடையாதும்பாங்க . அப்புறமா புத்திஸ்ட் கிடையாதுன்னும்பாங்க ..
 திமுக பேச்சாளர் வழக்கறிஞர்  சரவணன் அண்ணாத்துரையின் உரையில் ஒரு சிறு பகுதிய மட்டும் இங்கே எழுதியுள்ளேன் ..

கருத்துகள் இல்லை: