செவ்வாய், 10 டிசம்பர், 2019

மகளை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் ... மகள் முஸ்லிமை காதலித்ததால் பார்ப்பன தந்தை அர்விந்த் திவாரியின் கொடுரம்

Mumbai: The Thane crime branch (CB) has arrested the father of the deceased girl whose dismembered body was found stuffed inside a suitcase outside Kalyan railway station. The girl was hacked to death over her alleged affair with a Muslim boy. The police retrieved CCTV camera footage showing the suspect with his face covered. asian age.
vikatan.com - சத்யா கோபாலன் : மும்பையில் தன் மகளைக் கொன்று
சூட்கேஸில் அடைத்துக்கொண்டு சென்ற தந்தை ஆட்டோ ஓட்டுநரால் போலீஸில் சிக்கியுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜானுபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்விந்த் திவாரி. இவர் நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் வசித்துவந்துள்ளார். குடும்பச் சூழ்நிலை காரணமாக அர்விந்த் திவாரியும் அவரின் மூத்த மகள் பிரின்சியும் பிழைப்புதேடி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மும்பைக்கு வந்துள்ளனர். திவாரி ஒரு போக்குவரத்து கம்பெனியிலும் மகள் பிரின்சி தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், வேலை செய்யும் இடத்தில் ஒருவரைக் காதலித்து   (முஸ்லிம்)  வந்துள்ளார் பிரின்சி. இந்த விஷயம் திவாரிக்குத் தெரியவரவே, மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தன் மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலிப்பதை ஏற்றுக்கொள்ளாதவர், மகள் பிரின்சியைக் கொலை செய்து அவரது உடல் பாகங்களைத் துண்டாக்கி, சூட்கேஸில் அடைத்துவைத்து மும்பையின் பல இடங்களில் வீசியுள்ளார்.

இதுபற்றிப் பேசியுள்ள தானே குற்றப்பிரிவின் மூத்த அதிகாரி நிதின் தாக்கரே, ``பிரின்சி தான் வேலை செய்த இடத்தில் வேற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் அறிந்ததும் கோபப்பட்ட திவாரி பலமுறை இது தொடர்பாக தன் மகளுடன் சண்டையிட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, தந்தையைச் சந்தித்துத் தான் காதலிக்கும் நபரையே திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அப்போது தந்தைக்கும் மகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுப்பான திவாரி தன் மகளைக் கொலை செய்து பின்னர் உடலை வெட்டி இரண்டு மூன்று சூட்கேஸ்களில் அடைத்துள்ளார். பின்னர் அதை ஆட்டோவில் வைத்து டிட்வாலா ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்து ரயில் ஏறி கல்யாண் நகர் வந்து இறங்கி, அங்கிருந்து மீண்டும் சில ஆட்டோக்களில் ஏறி, தன் திட்டப்படி பல இடங்களில் அந்த சூட்கேஸ்களை வீசியுள்ளார்.

 இறுதியாக, ஒரு சூட்கேஸுடன் ஆட்டோவில் ஏறும்போது அந்த ஓட்டுநர், `சூட்கேஸில் என்ன உள்ளது.. இவ்வளவு துர்நாற்றம் வீசுகிறது’ எனக் கேட்டுள்ளார். அதற்கு ஏதோ சொல்லிச் சமாளித்துவிட்டு சூட்கேஸை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு இறங்கிச் சென்றுள்ளார். திவாரி இறங்கிச் சென்ற பிறகுதான் ஓட்டுநர் அந்த சூட்கேஸைக் கவனித்துள்ளார். பின்னர் இதுதொடர்பாக தன் பிற
நண்பர்களிடம் அவர் தெரிவிக்கவே, அனைவரும் இணைந்து அருகில் உள்ள காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அதன் உள்ளே இருந்த உடல் பாகங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் திவாரியை அழைத்துவந்த ஆட்டோ ஓட்டுநரிடம் தீவிர விசாரணை செய்து, அவர் வந்த கல்யாண் ரயில் நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் திவாரியை அடையாளம் கண்டுள்ளனர்.


முதலில் அவரிடம் சாதாரணமாகச் சென்று மகளைப் பற்றி விசாரித்துள்ளனர். அதற்கு முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். பின்னர் போலீஸாரின் விசாரணையில் தன் மகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திவாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரின்சியின் உடல் பாகங்களில் பாதியைக் காணவில்லை, அதுதொடர்பாக திவாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முடிவிலேயே திவாரி தன் மகளை எப்படிக் கொலை செய்தார், மீதமுள்ள உடற்பாகங்கள் எங்கே என்பன பற்றிய விவரங்கள் தெரியவரும்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: