வியாழன், 12 டிசம்பர், 2019

டெல்லிக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பை விட யாழ்பாணத்துக்கும் சென்னைக்குமான உறவும் தொடர்பும் அதிகம்

Don Ashok -Ashok.R : சென்னைக்கும் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்காரனுக்கும்
வடநாட்டானுக்கும் உள்ள தொடர்பைவிட சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான உறவும் தொடர்பும் அதிகம். வாழ வக்கற்ற வடநாட்டான்கள் இங்கே குடியேறலாம், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் குடியேறக் கூடாது என்றால் சூடுசொரணை உள்ள எவனாவது அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பானா? முதலில் மனிதனை மத ரீதியில் தரம்பிரிக்க இவர்கள் யார்?
ஒருவேளை 'நாட்டின் நலனுக்காகவே' மத/சாதி ரீதியிலேயே மக்களைப் பிரித்தால் கூட, இந்த நாடு எந்த மதத்தினரால் எந்த சாதியினரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என நாம் ஒரு கணக்கெடுப்போம். பார்ப்பனச் சாதி என்றுதான் முடிவுகள் வரும். முகாலயர்கள், வெள்ளையர்கள் காலத்திலிருந்து, பின் ஹிட்லர் ஜெயிக்கிறான் எனத் தெரிந்தவுடன் முதல் ஆளாக ஜெர்மன் மொழி படிக்கப்போனதுவரை வந்தாரின் கால்களுக்கிடையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டது எந்த சாதி? காற்றுபுகாத இடங்களில் கூட காட்டிக் கொடுத்தது எந்த சாதி? எந்த முஸ்லிம் வெள்ளைக்காரனிடம் மன்னிப்பு கேட்டான்? உங்கள் சாவர்க்கர் முஸ்லிமா? பாரதியார் முஸ்லிமா? வாஜ்பாய் முஸ்லிமா? இவர்கள் எல்லோரும் இந்துக்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்கள் என்பதை நினைவில் கொள்க. ஆனால் அப்படிப்பட்டவர்களைக் கூட ஒருநாளும் நாம் பிரித்துப் பார்த்ததில்லையே? ஏதோ வாழ்ந்துவிட்டுப் போ, நாங்கள் போராடிக்கொள்கிறோம் என்றுதானே விட்டுவைத்திருக்கிறோம்.
இதெல்லாம் கூட விடுங்கள். நாடு என்பதற்கான வரையறை என்ன? ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு வரை டெல்லி என்பது தமிழர்களுக்கு வெளிநாடு. இப்போதிருக்கும் இந்தியா என்கிற நாடே வரலாற்றில் இல்லை.
நிர்வாக வசதிக்காக வெள்ளைக்காரன் வரைந்து வைத்த மேப்பை நாடாக்கிக் கொண்டோம். நாடு என்பதற்கான வரையறையே, வரலாறே இவ்வளவு பலவீனமாக இருக்கும்போது இங்கு யார் குடிமகன், யார் குடிமகன் இல்லை எனச் சொல்ல இந்த டெல்லி காட்டுமிராண்டிகள் யார்?
வாக்களித்த மக்களை வாழவைக்க வழி இல்லாத சாத்தான்கள், மக்களை மிருகங்களாகவே வைத்திருக்க இந்த மாதிரி சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். இதுவரை பாஜக பானைத் தண்ணீரில் விஷம் கலந்துகொண்டிருந்தது. இப்போது ஆற்றில் கலக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதை வேடிக்கைப் பார்ப்பதும், ஆதரிப்பதையும்போல ஒரு தேசத்துரோகம் உலக வரலாற்றில் எங்குமே கிடையாது.
-டான் அசோக்
டிசம்பர் 12.

கருத்துகள் இல்லை: