ஃபாத்திமாவிற்கு ஆதரவாக ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்...
மெட்ராஸ் ஐஐடியில் நிறுவனக் கொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீபிற்கு ஆதரவாக ஐஐடி மெட்ராஸின் மானுடவியல் துறை ஆராய்ச்சி மாணவி அல்ஃபியா ஜோஸ் ஆங்கிலத்தில் எழுதிய பதிவின் மொழிபெயர்ப்பு.
நான் ஒரு ஐஐடி மெட்ராஸின் மாணவன். எனது கல்வி வளாகம் வரு ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைகூடம். மிக முக்கியமாக அது இஸ்லாமோபோபியாவை கடைபிடிக்கிறது.
நவம்பர் 8ம்தேதி ஐஐடி மெட்ராஸில் முதலாமாண்டு எம்.ஏ மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். (நானும் அந்த துறையைச் சார்ந்தவன் தான்). இந்த கல்வி வளாகத்தின் அலட்சியம் குறித்தும் அதன் இயல்பான ஆதிக்க தன்மை குறித்தும் குறிப்பாக இங்குள்ள மாணவர்கள் குறித்தும் நான் பயப்படுகிறேன்.
ஒட்டுமொத்த கல்வி வளாகமும் இந்த பிரச்சினையில் மாணவர்கள் மனநலன், இயலாமை மற்றும் கோபம் குறித்து மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் புரிந்துகொள்ள முடியாத புள்ளி ஒன்று இருக்கிறது.( இவை கூட இவர்களின் திட்டமிட்ட பாதுகாப்பான நாடகமாக இருக்குமோ என்று நான் சந்தேகிக்கிறேன்) அந்த புள்ளி என்னவெனில் மாணவர்கள் அடையும் மன வேதனைகளுக்கான காரணம் தனிப்பட்டதல்ல.., மாறாக அவை திட்டமிட்டே கட்டமைக்கப்படுகின்றன.
இந்த கல்வி வளாகத்தில் ஏன் தற்கொலைகள் பொதுவானவையாக மாறிவிட்டன என்ற கேள்வியை நாம் கேட்க தவறிவிட்டோம் அதோடு தற்கொலைகள் ஒருபோதும் தனிப்பட்ட அல்லது சமூக அரசியலுக்கானது என்பதை உண்மையென ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம். மாணவர்கள் கல்வி சார்ந்து சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி இந்த "உயர்' கல்வி நிறுவனங்களை அடைவதற்கே தொடர்ந்து தங்களது " தகுதியை " எல்லா கட்டங்களிலும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது.
இங்குள்ள முரண்பாடு என்னவெனில் பாத்திமாவின் தற்கொலையை சுருக்கி ஒரு மதம் சார்ந்த விடயமாக்குவதின் மூலம் குறிப்பிட்ட குழுக்களுக்கான பிரச்சினை போல சித்தரித்து பாத்திமாவின் தற்கொலை குறிப்புகளை வலுவிழக்கச் செய்வதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் வலியுறுத்த விரும்புவது பாரபட்சமற்ற, முறையான, நேர்மையான நீதி விசாரணை நடக்க வேண்டும் என்பதே.
ஐஐடி மெட்ராஸ் கல்வி வளாகத்தில் குறிப்பாக மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பு மற்றும் சாதிய உணர்வுகளால் நிரம்பியுள்ளது. எங்கள் வகுப்பறைகளில் நிலவும் ஒவ்வொரு விவாதத்தின் முடிவிலும் பாகிஸ்தானை இழுப்பதும், முஸ்லிம் பெண்களின் அடையாளங்களை குறிப்பிடுவதாகவே அமையும். "பெருமளவு மக்கள் தொகை கொண்ட முஸ்லிம்களும் , கிருஸ்துவர்களும் ஏன் சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒப்பீட்டளவில் பிராமணர்கள் இரண்டு சதவிகிதமே இருக்கும் பொழுது முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் தான் சிறுபான்மையினரா.." என்ற கேள்வியை ஒரு முஸ்லிம் பெண் ஆய்வாளரை பார்த்து கேட்கிறார் எனது பேராசிரியர். பிராமணர்கள் சிறுபான்மையினராக இருக்க நினைப்பதென்பது அவர்களது பிராமணிய மனோநிலை. அந்த பிராமணியம் தான் கல்வியை குறிப்பிட்டு பிராமணர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டுமென போதிக்கிற மனுதர்மத்தினை உயர்த்தி பிடிக்கிறது.
உயர்சாதி அல்லாத மாணவர்களது வருகை என்பது ஐஐடி வளாகத்தில் சாதிய கவலையை அவர்களுக்கு உருவாக்குகிறது.
ஒரு முஸ்லிம் ஆய்வு மாணவர் சொல்கிறார் " முஸ்லிம் மாணவனாக இருப்பதினால் எனது ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு தொடர்ந்து பலகட்டங்களாக சரிபார்க்கப்பட்டது" , நான் தொடர்ந்து கல்விரீதியாக இது சரியானதுதான் என வாதிட்டேன். ஒரு கட்டத்துக்கு பிறகு ஒரு மூத்த துறைத்தலைவர் என்னிடம் வந்து "நன்றாகத்தானே நிதி வருகிறது(Internship) , தலைப்பை மாற்றிவிட்டு வேறு வேலையை கவனிக்கலாமே " என்று சொன்னார். இந்த கல்வி வளாகம் இஸ்லாமிய வெறுப்பையும்(இஸ்லாமோபோபிக்), சாதிய ஆதிக்கத்தையும் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க இன்னும் எத்தனை உதாரணங்கள் வேண்டும். (மன்னிக்கவும் கொலையுண்டவர் மீண்டு வந்து சொல்லும் வரை இஸ்லாமிய வெறுப்பு (இஸ்லாமோபோபிக்) என்ற சொல்லை பயன்படுத்த முடியாது. ஆதலால் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் அறிஞர்கள் இன்று கூறியிருப்பது போல இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுகள் என்று சொல்வது நாகரீகமாக இருக்கும்.)
ஐஐடி கல்வி வளாக மாணவர்களுக்கு பாத்திமா தற்கொலை செய்து ஆறு நாட்கள் கடந்துவிட்டன. இந்த தருணம் வரை ஒரு மாணவர் சமூகமாக அநீதிக்கெதிராக நான் ஒன்றிணையவில்லை. ஃபாத்திமாவின் நீதிக்காக மற்ற பல்கலைகழக மாணவர்கள் போராடுகையில் ஐஐடி மெட்ராஸ் மட்டும் அமைதியாக இருக்கிறது. எந்த அமைப்பு பாத்திமாவை கொன்றதோ அந்த அமைப்பினூடாக மௌனமாகவும், தந்திரமாகவும் கடந்து செல்ல இந்த வளாகத்தில் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
ஃபாத்திமாவிற்கு நீதி வேண்டும்.
ஆங்கிலம்: அல்ஃபியா ஜோஸ்
தமிழில் : அஹ்மது யஹ்யா அய்யாஷ்
#JusticeForFathimaLatheef
#JusticeForFathima
#IITmadraskilledfathima

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக